பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

அவர் ரொம்பவும் பவானி பக்தர். அந்த பூஜை செய்யாவிட்டால், அவர்களுக்கு மன நிறைவு ஏற்படாது. எங்கே மைசூர் அரசே நம்மோடு வாதம் செய்ய அவர்களுக்கு புள்ளிவிவரம் கிடைக்காதோ என்பதற்காக, என்ன இருந்தாலும் கொஞ்சம் கன்னடப் பற்று அவர்களுக்கு, பவானி பற்றிய ஒரு குறிப்பை தந்திருக்கிறார்கள் இந்த பவானி னி பற்றிய குறிப்பு பத்திரிகைகளிலே வெளிவருமானால். மைசூர் அரசினர் 'ஒரு நல்ல வாய்ப்பினை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நமக்குத் தந்தார்' என்று, அதைப் பயன்படுத்திக் கொள்ள தவற மாட்டார்கள் என்று கருதுகிறேன். எப்படியோ பிறந்த இடத்திற்கு கொஞ்சம் நல்லது செய்வது என்ற இந்த அற்புத காரியத்தை அவர்கள் செய்ததற்காக நான் அவர்களுடைய சாதுரியத்தை பாரட்டுகிறேன். ஆனால் இந்த விஷயம் விவாதிக்கப்படுகிற இந்த நேரத்தில் அது முற்றிலும் அவசியம் இல்லாத ஒன்றாகும். பரம்பிக்குளத்தைப் பற்றி அவர் குறிப்பிட்ட காரணத்தினால் பவானித் தண்ணீரை நாம் கொடுத்துவிட்டோம் என்கிற பழிச் சொல்லிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது.

நான் பதில் அளிக்க

பவானியிலிருந்து எடுக்கப்படுகிற தண்ணீரை விட அதிகமாக நாம் ஆனைமலை ஆற்றிலிருந்து தண்ணீரைப் பெறுகிறோம். ஏதோ கேரள அரசை நம் அரசு ஏமாற்றி விட்டது என்றோ, அல்லது கேரள அரசு நம் அரசை ஏமாற்றிவிட்டது என்றோ இல்லாமல், மனிதாபிமானத்தோடு பிரச்சினைகளை ஆராய்ந்து, இரண்டு மாநில அரசுகளும், இந்தப் பிரச்சினையை அணுகி பரம்பிக்குளம்-ஆளியாறு நீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். திரு.கே.எல்.ராவ் அவர்கள் நோக்கோடு

-

கட்சி

எதையும் அணுகுபவர் அல்ல. இந்த ஒப்பந்தத்தைப்பற்றி இது ஒரு அருமையான ஒப்பந்தம் என்றும், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இது இருக்கவேண்டும் என்கிற அளவிலும் பொருமையோடு பாராட்டியிருக்கிறார்கள். ஆகவே, அந்த அளவில் பரம்பிக்குளம் ஆளியாறு ஒப்பந்தம் பற்றி விளக்கத்தை முடிக்க விரும்புகிறேன்.

இங்கே பேசப்பட்ட ஒருங்கிணைந்த கருத்துக்களை, இன்னின்ன கருத்துக்கள்தான் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்த்து, ஒட்டு மொத்தமாக இப்பொழுது சட்ட மன்றத்தினுடைய வேண்டுகோளாக மத்திய சர்க்காருக்கும்,