பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

23

இதை அன்னியில் மேற்கொண்டு மைசூர் அரசாங்கம் காவிரியிலும் அதன் உபநதிகளாகிய ஹேமாவதி, லட்சுமணதீர்த்தா, கபினி, சுவர்ணவதி, யாகச்சி போன்ற நதிகளில் நீர்த்தேக்கங்களைக் கட்ட வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு அந்த நீர்த் தேக்கங்களைப் பற்றிய முழு புள்ளி விபரங்களையும் தரவேண்டும், அம்மாதிரி நீர்த்தேக்கங்களை கட்டும்போது தமிழகத்திற்குச் சேரவேண்டிய த ண்ணீரின் அளவு குறையக்கூடாது. அந்தத் தண்ணீரின் அளவு ஜூன் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் முடிய வருடத்தில் 8 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் எந்த அளவு தண்ணீர் வந்து சேரவேண்டும் என்று தெளிவாக உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ளது. மீதியுள்ள 4 மாதங்களிலும் கோடைக்காலப் பயிருக்காக எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

8

தண்ணீரின் அளவைத் திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல் அணைக்கட்டில் அளந்து பார்த்து நமக்குக் கிடைக்க வேண்டிய அளவு, தண்ணீர் வந்து சேருகிறதா என்று பார்த்துக் கொள்ளவும் வழி வகுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உடன்பாடு, மைசூர் அரசு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்படாமல் புதிய நீர்த் தேக்கங்களைக் கட்டிக்கொள்ள வழிவகை செய்கிறது என்பது உண்மை. ஆனால், அவர்கள் தமிழக அரசுக்கு முழு விபரங்களையும் தராமல் தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவுக்குக் குந்தகம் ஏற்படாமல் இருக்கிறதா என்று பார்க்காமல் எந்தத் திட்டங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு இருந்தும் மைசூர் அரசு ஹேமாவதி, கபினி, ஹாரங்கி, சுவர்ணவதி போன்ற நதிகளில் நீர்த்தேக்கங்களைக் கட்டத் தொடங்கியிருக்கிறது. இது, தமிழ் நாட்டின் நீர்ப் பாசனத்தைப் பாதிக்கும் என்பதற்கு ஐயமே இல்லை,

ஆகவேதான் 1968-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் அன்று பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நானும் மைசூர் மாநில முதல்வர் திரு. வீரேந்திர பட்டீல் அவர்களும், மத்திய அமைச்சர் திரு.கே.எல்.ராவ் அவர்களும், டெல்லியில் விவாதம்