பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

27

அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டம் ஒன்றினை நான் கூட்டி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்தையும் நான் கேட்டு அறிந்தேன். அவர்கள் ஹேமாவதி அணையைக் கட்டுவதினால் தமிழகத்திலே ஏற்பட்டிருக்கிற அபாயங்களையும் அதைத் தவிர்ப்பதற்கு இந்த அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு எல்லாக் கட்சிகளின் சார்பிலும் நிரந்தரமான நிறைவான ஆதரவு உண்டு என்பதனையும் எடுத்துக் கூறினார்கள். அவர்களுடைய அரிய யோசனைகளைப் பெற்று அன்றைய தினமே நானும் நம்முடைய தொழில் அமைச்சர் அவர்களும் டெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் அவர்களைச் சந்தித்து இந்தப் பிரச்சினையிலே உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம். விரைவிலே நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் விரைவிலே நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள் என்றாலும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்காதது வருந்துதற்குரிய ஒன்றாகும். ஏனென்றால் மைசூர் மாநிலத்தினுடைய முதலமைச்சர் அவர்களும் மற்றவர்களும் விடுகின்ற அறிக்கைகள், பத்திரிகைகளிலே வருகின்ற செய்திகள், இவற்றைப் பார்க்கிறபொழுது அவர்கள் மேலிடத்திலிருந்து எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் சென்ட்ரல் வாட்டர் பவர் கமிஷனிடமிருந்து எத்தகைய ஒப்புதலையும் பெறாமல், திட்டக் குழுவின் ஒப்புதலைப் பெறாமல் ஹேமாவதி அணையைக் கட்டுவது என்று தீர்மானித்து அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் தமிழகத்திற்கு வருகின்ற பேரபாயத்தினை உடனடியாகத் தடுக்க வேண்டுமென்ற பொறுப்பும் அக்கறையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. இதிலே மத்திய அரசு இன்னும் காலதாமதம் செய்வது உள்ளபடியே நாம் எல்லாம் வருந்துவதற்குரிய ஒன்றாகும். விரைவில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். யாருடைய அனுமதியும் பெறாமல், திட்டக் குழுவின் அனுமதியும் பெறாமல் ஒரு மாநிலத்திலே இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்யலாம் என்ற முறையிலே மைசூர் மாநிலம் வழி வகுக்குமானால் மற்ற மாநிலங்களும் அதைப் பின்பற்றுமானால் மத்திய அரசு என்ற ஒன்றே தேவையில்லாமல் போய்விடக்கூடிய சூழ்நிலையெல்லாம் ஏற்பட்டுவிடும். இந்தப் பேரபாயத்தை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை