பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

காவிரிப் பிரச்சினை மீது

எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு வர இருக்கின்ற இப் பெரிய ஆபத்தை ஏற்படுத்த ஹேமாவதி அணைக்கட்டு கட்டக் கூடாது என்ற உறுதிமொழியும் காக்கப்படாத அளவிலே, நாம் உயிராக மதிக்கின்ற 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மதிக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்வது மிகக் கவலையோடு அணுகிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இந்தக் கவலை தரக்கூடிய பிரச்சினையில் மத்திய அரசு விரைவில் தலையிட வேண்டும். மத்திய அரசின் அரசின் பதிலுக்கு சில நாட்கள் காத்திருப்போம். பதில் எதிர்பார்க்கிற நேரத்திற்குள் வராவிட்டால் மீண்டும் எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களை அறிவதாக இருக்கிறேன். அப்படி அறிகிற நேரத்திலே நாம் மனம்விட்டுப் பல விஷயங்களைப் பேசி, இருக்கிற நிலைமைகளை ஆராயவும், சிறிய அளவிலே கூட்டப்படுகிற எல்லாக் கட்சித் தலைவர்களின் அக் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்தச் சபையிலே அதை விவாதிக்கத் தேவையில்லை, மத்திய அரசின் உடனடியான பதிலை இந்த அரசு விரைவில் எதிர்பார்க்கிறது. மத்திய அரசு அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கிறோம். காட்டும் என்றால் அந்தப் பதிலை, காட்டவில்லை என்றால் அதனால் ஏற்படுகிற நிலைமைகளை ஆராய விரைவிலே அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டம் கூட்டப்படும். டாக்டர் ஹாண்டே அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் நாம் எல்லோரும் இந்த விஷயத்திலே எவ்வளவு கவலையோடு இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கக்கூடிய தீர்மானமாகப் பயன்படுகிறது என்ற அளவிலே இதற்காக இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை அனுமதிக்கத் தேவையில்லை என்ற அளவிலே என்னுடைய கருத்துக்களைக் கூறி அமைகிறேன்.