பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

29

உரை : 4

நாள் : 08.07.1971

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இந்த மாமன்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் இந்த மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டு மென்கிற ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினுடைய அமோகமான ஆதரவோடு அந்தத் தீர்மானம் இங்கே நிறைவேற்றப்பட்டது. நாட்டுக்குப் பெயர் தேவை என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இன்று அந்த நாட்டினுடைய எதிர்கால வாழ்வு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர் காலத்திலே வளம் இழந்து, வாழ்விழந்து நிற்கக்கூடிய பயங்கரமான சூழ்நிலையில் இருந்து அவர்களை விடுவிப்ப தற்காக இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சித் தலைவர் களுடைய கூட்டத்தில் வடிவம் அமைக்கப்பட்டு இந்த மாமன்றத்தில் உங்கள் அனுமதியோடு நான் அதை வைத்திட முன் நிற்கிறேன்.

"தமிழ்நாடு, மைசூர் அரசுகளுக்கிடையே 1892, 1924-ஆம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் விதிகள் அனைத்தையும் மீறி மைசூரில் ஹேமாவதி, கபினி, ஹரங்கி, சொர்ணவதி அணைத்திட்டங்களையும் வேறு சில முக்கிய அணைத் திட்டங்களையும் அவைகளுக்கான திட்ட விவரங்களைப் பற்றித் தமிழ்நாடு அரசுக்கு மைசூர் அரசு முறைப்படி முன்னதாக அறிவித்து, தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெறாமலும், இந்திய அரசின் அனுமதியை முன் கூட்டியே பெற்றுக் கொள்ளாமலும், இதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேரிடுவதைப்பற்றிப் பொருட்படுத்தாமலும் தன்போக்கில்