கலைஞரின் சட்டமன்ற உரைகள்
31
அடிப்படையிலும் எள்ளளவும் பிற மாநில மக்களுக்கும் நமக்கு மிடையே பகை உணர்வுகள் தோன்றக்கூடாது என்ற உணர்ச்சியோடும் தயாரிக்கப்பட்டுள்ளதாகும்
காவிரி நதியில் தமிழ்நாட்டுக்குப் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிற பாத்ய உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்மானத்தினுடைய இன்றி யமையாத நோக்கமாகும்.
காவிரி நதி இந்தியாவிலே இருக்கிற மிகப் பெரிய நதிகளில் நான்காவது நதியாகும். கிட்டத்தட்ட 804 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு தமிழ்நாட்டில் மாத்திரம் 321 கிலோ மீட்டர் அளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் மைசூர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இதனுடைய துணை நதிகளாகிய ஹேமாவதி, லோகபவானி, ஹரங்கி, சிம்ஸா, அர்க்காவதி, லட்சுமண தீர்த்தம், கபினி, சுவர்ணவதி ஆகிய துணை ஆறுகளும் கலந்து, இவைகள் எல்லாம் காவிரியோடு கலக்கும்வரை தனித்தனிப் பெயர் கொண்டிருந்தாலும் காவிரியோடு கலந்தவுடன் காவிரி என்கிற ஒரே பெயரோடு விளங்கிக் கொண்டிருப்பதை வரலாறு கூறுகின்றது. அந்த நதியில் தமிழகத்திற்குரிய பங்கு, தமிழர்களுடைய உரிமைகள் பாதிக்கப் படாமல் இருக்கவேண்டுமென்பதற்காக தமிழகம் உரிமைக் குரல் கொடுத்த நேரத்தில் எல்லாம் அன்றைய தினம் ஆட்சியில் இருந்தவர்கள் தலையிட்டு 1892-ஆம் ஆண்டு ஒரு முறையும் 1924-ஆம் ஆண்டில் ஒருமுறையும் இரண்டு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.
இந்த இரண்டு ஒப்பந்தங்களிலும் குறிப்பாகக் கவனிக்கப் படவேண்டிய பிரச்சினைகள் கிருஷ்ணராஜசாகர் அணை இயங்குவது காவிரி டெல்டா பாசனத்திற்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்குமாறு குறுக்கிட்டுவிடக் கூடாது என்பதாகும். இரண்டாவது தமிழக மேட்டூர் அணை 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கருக்குப் பாசன வசதிக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் மைசூர் அரசு அணைகள் கட்ட விரும்பினால் தமிழக அரசின் முன் சம்மதம் பெற்றே கட்டவேண்டும். தமிழக அரசின் முன் சம்மதம் இல்லாமல் மைசூர் அரசு எந்தவித அணைகளையும் கட்டிவிடக்கூடாது. உத்தேசித்திருக்கிற திட்ட விவரங்கள்