பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

காவிரிப் பிரச்சினை மீது

வேண்டும். இந்த அணைகளை எழுப்புவதன் மூலமாக நமக்கு தமிழ் நாட்டிற்கு - தரப்படவேண்டிய தண்ணீர் அளவு பாதிக்கப் படக்கூடாது; அதற்கான உத்திரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நிலைமை என்ன? ஒப்பந்தத்தில் இருப்பது போல நமக்கு விவரங்கள் அளிக்கப்படவில்லை. நமக்கு விவரங்கள் அளிக்கப்படாதது மாத்திரமல்ல, மத்திய அரசினுடைய முன் அனுமதியும் பெறப்படவில்லை. இந்த இரண்டுமில்லாமல் இன்றைக்கு மைசூர் அரசு, தீர்மானத்திலே நாம் குறிப்பிட்டிருப் பதைப்போல, தன் போக்கில் இந்த அணைகளைக் கட்டிக் கொண்டு வருகின்றனர்.

இந்த ஹரங்கியைப் பற்றி மாத்திரம் சொல்கிற நேரத்தில் இது பட்டியலில் சேர்க்கப்படாத ஆறு, ஒப்பந்தத்தில் வராத ஆறு என்று சொல்கிறார்கள். இங்கேதான் நம்முடைய வாதம் வலுவடைகிறது. ஒப்பந்தத்தில் வராத ஆறு, ஆகவே நாங்கள் விவரங்களைக் கொடுக்க முடியாது என்று கூறுகிறார்களே, ஒப்பந்தத்தில் வராத ஆறுக்கு விவரங்கள் இல்லையென்றால் ஒப்பந்தத்தில் இருக்கிற ஆறுகளுக்கு விவரங்களை அறிவித்தாக வேண்டும் என்பதை அவர்களை அறியாமலே ஒப்புக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த ஆறுகளில் கட்டப்படுகிற அணைகளுக்கான விவரங்களை அறிவித்தார்களா என்றால் இல்லை. விவரங்களை அறிவிக்காமல், பேச்சுவார்த்தைகள் எதிலுமே சந்தித்து விவாதிக்காமல், மத்திய அரசினுடைய முன் அனுமதி பெறாமல் நடைபெறுகிற இந்தக் காரியத்தை, 1968-ம் ஆண்டு மைசூரினுடைய முதலமைச்சர் திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் அடிக்கல் நாட்டு விழா என்றைக்கு நாட்டினாரோ, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசாங்கம் அதை ஆட்சேபித்து வந்திருக்கிறது. அப்படி ஆட்சேபித்து வந்த நேரத்திலேயெல்லாம் தமிழ்நாட்டு அரசாங்கம் இதிலே கட்சி சார்பற்ற முறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டிவைத்து நிலைமைகளை விளக்கி அவர்களுடைய அரியகருத்துக்களை யெல்லாம் பெற்று ஒவ்வொரு முறையும் மைசூர் முதல்வரோடோ, கேரள முதல்வரோடோ அல்லது திரு. கே. எல். ராவோடு பேசுகிற நேரத்திலோ அப்போதெல்லாம் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி முடிவுகள் எடுக்கப்பட்ட அடிப்படையில்