பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்கு

என்னுரை

1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றது தி. மு. கழகத்தின் மாநில மாநாடு. தி. மு. கழகம் 1949ல் தொடங்கப் பட்டு ஏழாண்டுகள் ஆகியிருந்தன. அப்போதெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தி. மு. க. குறித்துப் பேசினாலும், எழுதினாலும், பேட்டி கொடுத்தாலும் ஓர் அறைகூவல் விடத் தவற மாட்டார். "தி. மு. க. காரர்கள் வெட்ட வெளியில் நின்று பேசுகிறார்களே; அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பது உண்மையானால் சட்டசபைக்கு வந்து பார்க்கட்டுமே !" என்பதுதான் அந்த அறைகூவல் அவரது அந்த அறைகூவலை அன்பான அழைப்பாகவே கருதி, அறிஞர் அண்ணா அவர்கள், "இனிமேல் வரும் தேர்தல்களில் தி. மு. க. போட்டியிடும்" என்று ஒரு தீர்மானத்தை, திருச்சி மாநில மாநாட்டில் கூடியிருந்த லட்சோபலட்சம் மக்களின் தீர்ப்பாகவே வெளியிட்டார்.