40
காவிரிப் பிரச்சினை மீது
தமிழக முதலமைச்சருடைய கொடும்பாவி மைசூர் மாநிலத்திலே கொளுத்தப்பட்டதையும் அவர்களும் சுட்டிக் காட்டினார்கள். மாண்புமிகு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் திரு. கே. டி. கே. தங்கமணி அவர்களும் இங்கே சுட்டிக் காட்டினார்கள். முதலமைச்சருடைய கொடும்பாவி மைசூர் மாநிலத்திலே கொளுத்தப்படுவதைப் பற்றிக்கூட நான் வருத்தப் படவில்லை. நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதைச் சில பேர் நம்முடைய தமிழ்நாட்டிலே விளம்பரப்படுத்துகிறார்களே என்பதை எண்ணித்தான் நான் வருத்தப்படுகின்றேன். தமிழ் நாட்டில் “காவிரி நீர்ப் பிரச்சினையை நீ சீக்கிரம் தீர்க்கவில்லை, இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்" என்று சுட்டிக்காட்ட அதற்கு அடையாளமாக என்னுடைய கொடும்பாவியைத் தமிழக மண்ணிலே தமிழக மக்கள் கொளுத்தினால்கூட நான் வருத்தப்பட மாட்டேன். நாம் வேகமாகச் செயல்படவில்லை இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டுமென்று இப்படிச் செய்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியடைவேன். ஆனால் இம்மாதிரி செய்திகளைப் போடுகின்ற நேரத்திலே மகிழ்ச்சியுடன் போடுவது மாதிரி போடுகிறார்களே என்றுதான் வேதனைப் படுகிறேன். நான் ஒருமுறை சொன்னேன், நமக்குள்ளே ஆயிரம் தகராறுகள் இருந்தாலும் வெளிமாநிலங்களுக்கு நம்முடைய மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதிலும் நம்முடைய மாநிலத்தின் மான உணர்ச்சியை விட்டுக் கொடுப்பதிலும் நாம் கிஞ்சிற்றும் கட்சி மாச்சர்யங்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது என்பதை நான் எடுத்துக்காட்டியிருக்கிறேன். அதை இங்குள்ள உறுப்பினர்கள் எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள். ஒரு பத்திரிகையில் - பத்திரிகையின் பெயரை வெளியிட விரும்பவில்லை - அந்தச் செய்தி எப்படி வெளியிடப்பட்டிருந்தது என்பதைப் படித்துக்காட்ட விரும்புகிறேன்.
ஆனால்
-
"பெங்களூர் : 500 கன்னடத்தவர் ஒருவருடைய தலைமையில் அவருடைய பெயரை படிக்க விரும்பவில்லை முதல் மந்திரி கருணாநிதியின் மைசூர் எதிர்ப்பு கொள்கையை எதிர்த்து அவருடைய கொடும்பாவியை எடுத்துச்சென்று எரித்தார்கள்'
ஊர்வலமாக