42
காவிரிப் பிரச்சினை மீது
மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்தைக் கூட்டி நான் எந்தவித கிளர்ச்சியை நடத்துவதாக இருந்தாலும் அதற்கு ஒரு கூட்டணியை மத்திய அரசுக்கு அறிவித்துவிட்டு நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை இந்த மன்றத்திலே உங்கள் முன்னால் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மைசூர் மாநில மக்களுக்கு எதிரியாக நம்மை அவர்கள் எடுத்துக் கொள்ளக் கொள்ளக் கூடாது என்கிற வேண்டுகோளை என்னுடைய சார்பாக மாத்திரமல்ல, இந்த மன்றத்திலே இருக்கின்ற எல்லாக் கட்சிகளின் சார்பாக மைசூர் மாநிலத்திலேயிருக்கின்ற பெருங்குடி மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
திரு. ஹாண்டே அவர்கள் குறிப்பிட்டார்கள், மகஜன் கமிட்டி அறிக்கையைப் பரிசீலித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் மைசூர் அரசு இதை ஏன் ஏற்றுக்கொள்ள வில்லை என்று கேட்டார்கள். நான் டெல்லிக்கு 114 ஆண்டு களுக்கு முன்பு சென்றிருந்தபோது மைசூர் மாநில நாடாளுகின்ற உறுப்பினர்கள் எல்லாம் என்னைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பின் நோக்கம் மைசூர் அரசினுடைய நியாயமான வாதங்களுக்குப் பின்னால் நானும் நிற்கவேண்டும் என்பதாகும். அவர்கள் அப்போது பேசும்போது மகஜன் கமிட்டி நிறுவப்பட்டு அந்தக் கமிட்டி தீர்ப்பளித்த பிறகு அதற்குப் புறம்பாக நடத்தலாமா என்று கேட்டார்கள். நான் சொன்னேன், இந்தத் தீர்ப்புக்குப் புறம்பாகவோ ஒப்பந்தத்துக்குப் புறம்பாகவோ யாரும் நடக்கக் கூடாதென்பது நியாயம்தான் என்று சொன்னேன். நான் மைசூர் ஒப்பந்தத்தை மீறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டு சிரித்தார்கள். அதற்குப் பிறகு திரு. ஹண்டே அவர்கள் குறிப்பிட்டதைப் போல இன்னும் அவர்கள் மகஜன் கமிட்டியின் ரிப்போர்ட்டை அங்கீகரிக்க வேண்டுமென்று எப்படி மத்திய அரசை நிர்ப்பந்திக்க மைசூர் அரசுக்கு உரிமை இருக்கிறதோ அதைப்போல நம்முடைய மாநில அரசுக்கு, தமிழக அரசுக்கு ஒரு நியாயமான கோரிக்கையில் இந்தப் பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டும் என்பதிலே ஏராளமாக உரிமைகள் இருக்கின்றன.