44
காவிரிப் பிரச்சினை மீது
அடுத்து 1967-ம் ஆண்டு இன்னொரு சம்பவம் நடைபெற்றது. நம்முடைய தமிழ்நாட்டுடைய நீர்ப்பாசனத்துறை பொறியாளரும், மைசூர் நீர்ப்பாசன பொறியாளரும் மத்திய அரசின் நீர்ப்பாசன பொறியாளர் தலைமையில் கூடி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சி.டபிள்யூ.பி.சி நீர்ப்பாசனத் துறை பொறியாளர் டி.பி.ஆனந்த் கையெழுத்திட்டிருக்கிறார். மைசூர் அரசின் சார்பாக மேக்டோம் கையெழுத்திட்டிருக்கிறார். தமிழகத்தின் சார்பாக ஜே.ஈ.வாஸ் கையெழுத்திட்டிருக்கிறார். அதிலே சொல்லி இருப்பது,
"The Chief Engineer, Mysore, explained that the Mysore Government was fully prepared to honour the 1924 agreement and that the limit flow that is guaranteed therein would not be affected in any way the Hemavathi Project".
என்று சொல்லி கையெழுத்து போட்டிருக்கிறார். அடுத்தபடி அரசின் பொறியாளர் சொல்லுகிறார் : -
'The Chairman stated that this examination would be done by the C.W.amd P.C. and that the contribution of Hemavathi river in the impoundable quantity will be determined from the available inflow data from 1940-41 onwards consis- tent with the conditions of the 1924 agreement. Suitable pro- portion factors will have to be fixed by joint gaugings between Mysore and Madras. Rules of regulation should also be framed by the two Governments in due course".
இந்த அளவுக்கு நல்ல ஆதாரங்கள் நம்மிடத்தில் இருக்கின்றன. அந்தக் காரணங்களாலேதான் நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில் மைசூர் அரசு தன்னிடத்தில் நியாயங்கள் இல்லாத காரணத்தாலே 1967-ம் ஆண்டு வரையில் 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நாங்கள் மதிக்கிறோம், அதற்குப் பாதகம் இல்லாமல்தான் இந்த அணைகள் கட்டப்படும் என்று கூறியவர்கள், 1968-ல் ஹேமாவதி அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக அரசின் இசைவையும் முன் ஒப்புதலையும் பெறாமல், மத்திய அரசின் முன் அனுமதியையும் பெறாமலும் நடத்தினார்கள். அந்தச் சமயத்தில் கட்சிக் கண்ணோட்டத்தில் தமிழக அரசு இதைக் காணவில்லை.