கலைஞரின் சட்டமன்ற உரைகள்
45
மதிப்பிற்குரிய ஹாண்டே அவர்கள் கூறியபடி அன்றைக்கு மைசூரில் முதலமைச்சராக இருந்தவர் வீரேந்திரபட்டீல். அவர்கள் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள். கழக அரசு அப்போதும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம் என்ற அளவில்தான் தமிழக அரசு அனைத்துக் அ கட்சித் தலைவர்களையும் கூட்டி மிகுந்த நிதானத்தோடும், இரண்டு மாநிலங்களுக்கும் உள்ள உறவுகளுக்கு எந்தவிதமான ஊனமும் ஏற்படக்கூடாது என்ற முயற்சியோடும் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டது, பேச்சு வார்த்தை நடத்தியது. அதை இந்த மன்றத்தில் உள்ள உறுப்பினர்களும் பொதுமக்களும் மிக நன்றாக அறிவார்கள். இதற்கு பிறகு 1968-ல் அணைக்கட்டுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தியதற்குப் பிறகு மைசூர் சட்ட மன்றத்தில் பேசிய முதலமைச்சர் வீரேந்திர பட்டீல் அவர்கள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மைசூர் அரசு மதிக்காது என்று சொன்னார்கள். இந்த அணைக்கட்டு அடிக்கல் நாட்டு விழா வரை மதிக்கப்பட்டு வந்த 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை, 1962-ல் மத்திய அரசின் பொறியாளர் முன்னிலையில் தமிழக மைசூர் மாநிலங்களின் பொறியாளர்கள் கையெழுத்திடுகின்ற நேரத்தில் மதிக்கப்பட்ட 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மைசூர் சட்டசபையில் முதலமைச்சர் இனி அது மதிக்கப்படமாட்டாது என்று தட்டிக்கழிக்கிறார். இதைக்கேட்டு திடுக்கிட்ட அதிர்ச்சிக் குள்ளான தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிற்கு எழுதி அதன் உதவியை நாடியது. நம் முறையீடுகள் மத்திய அரசிற்கு சென்றன. அதற்குப் பிறகு மத்திய அரசு உடனே தலையிட்டு மைசூர் அரசு இந்த அணைகளைக் கட்டக்கூடாது, நிறுத்தி வையுங்கள், பேச்சுவார்த்தையில் முடிவு காணுகிற வரையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாகத் தகவல் தந்தார்கள்.
அப்போதுகூட சென்னையில் உள்ள பத்திரிகைகள் மத்திய அரசு மைசூர் அரசிற்கு உத்தரவு போடுவதை எதிர்க்கிறோம் என்ற அளவில் எழுதியதை மறந்துவிடவில்லை. பெங்களூரில் அந்தப் பத்திரிகை விற்பனையாக விற்பனையாக வேண்டும் என்ற வேண்டும் என்ற விற்பனை நோக்கத்தோடு எழுதியது. அதைப்பற்றி எல்லாம் அதிகமாகப் பேச விரும்பவில்லை.
அப்போது மைசூர் அரசிற்கு மத்திய அரசு இட்ட ஆணை தொடர்ந்து மீறப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும்