பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

காவிரிப் பிரச்சினை மீது

டில்லியில் தான் போட்ட உத்தரவை மைசூரில் அவமதித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

இப்போதுதான் நாம் இந்தியாவின் ஒருமைப்பாட்டில் இவர்களுக்கு எல்லாம் உண்மையில் நம்பிக்கையிருக்கிறதா என்ற சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியவர்களாக இருக்கிறோம்.

திரு.பொன்னப்ப நாடார் அவர்களும் மற்றவர்களும் சொன்னார்கள். இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதகம் இல்லாத வகையில் நீங்கள் பெரிய போராட்டம் நடத்த வேண்டுமென்று சொன்னார்கள். போராட்டம் என்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கினால் எங்கே அது ஒரு பெரிய போராட்டமாக எழுச்சி பெற்று பிரிவினையில் போய் அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில் சொன்னார்கள்.

எஎ

பிரிவினை பேசிய நாம் இன்றைக்கு மத்திய சர்க்காரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கிறோம். மத்திய அரசின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தி வருகிற நேரத்தில், மத்திய அரசின் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் எழுப்புகிற நேரத்தில் முறைப்படி எந்த எந்த வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை ஆராய ராஜமன்னார் குழுவை அமைத்தோம். அவர்கள் சில சிபார்சுகளைச் செய்திருக்கிறார்கள். அதை நாம் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் அதே நேரத்தில் இன்று இருக்கின்ற சட்டத்திட்டங்களின்படி மத்திய அரசின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டுமென்ற பண்பை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அரசு பெற்றிருக்கிறது. அதற்கு அடையாளம்தான் மேலவையில் கூட எடுத்துச் சொன்னேன். வீராணம் திட்டத்திற்கு 11/2 ஆண்டு காலம் மத்திய அரசின் அனுமதி கிடைக்கிற வரையில் காத்துக் கொண்டிருந்தோம். இது எந்த மாநிலத்தையும் பாதிக்கவில்லை, நம்முடைய மாநிலத்தை பொறுத்தது, நாங்களே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதாக அவசரப்பட்டு அந்தக் காரியத்தில் ஈடுபடவில்லை.

சொன்னேன்-அந்தக்

அதேபோல மேலவையில் கோட்டையைச்சுற்றி புல் பூண்டுகள் செதுக்கப்பட வேண்டும் என்று சொன்னதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றே செய்ய வெண்டும் என்று அதிகாரி சொன்னார். ஆகவே மத்திய அரசின் உதவி அமைச்சர் இங்கே வந்திருந்தபோது அவரை