பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

காவிரிப் பிரச்சினை மீது

அமைச்சராக இருந்தவர் திரு. சேத்தி, மத்திய அரசு மாநில அரசுகளை எவ்வளவு தூரம் மதிக்கிறது என்பதைக் கூறுகிறார். அதாவது, Refuting the charge that the State Chief Minister was not shown due respect during inauguration of the Madras Refinery என்று திரு. சேத்தி, பெட்ரோலிய அமைச்சர் கூறியிருக்கிறார்.

அப்போது அமைச்சராக இருந்தவர் திரு. திரிகுணசென் என்பவர். அக்டோபர் இரண்டாம் தேதியன்று, அதாவது மகாத்மா காந்தி பிறந்த நாளன்று 1969-ம் ஆண்டு அவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதாவது,

October 2, 1969.

While I am looking into how misunderstanding arose which had given you reason to believe that those who organised the function had failed to inform you and other Ministers of your State, I am writing once again to convey my most sincere apologies for your having had occasion to feel that you were not invited; whatever may be the reasons for this, I now try to assure you and your Government of my highest consideration at all time.

With regards.

Yours sincerely, (Signed) Triguna Sen.

என்று கடிதம் எழுதியிருக்கிறார். இவைகளையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம், மாநில அரசின் உணர்வுகளை, மத்திய அரசில் இருப்பவர்கள், தாங்கள் மத்திய அரசில் இருப்பதால் அவற்றையெல்லாம் மறுத்துவிடுவது, மட்டப்படுத்திவிடுவது என்பதெல்லாம் சரியான போக்கு அல்ல என்பதைக் கூறிக்கொள்கிறேன். அவர்களைப்போல நாம் நினைத்தாலும் செய்யலாம். இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேருமே என்பதைப் பொருட்படுத்தாமல், மைசூரைப்போல் 25 கோடி ரூபாய் செலவிடாவிட்டாலும், சின்னஞ்சிறு விஷயங்களை மத்திய அரசைக் கேட்காமலேயே நாம் நினைத்தால் செய்துவிட