பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

காவிரிப் பிரச்சினை மீது

பிரச்சினை எல்லாம், திருப்பித்திருப்பி எத்தனை முறை சொன்னாலும், 1968-ஆம் ஆண்டிலேயிருந்து வலியுறுத்தி வருகின்ற பிரச்சினை எல்லாம், நாம் மறந்துவிடாமல் எடுத்துக் கூறுகின்ற பிரச்சினை எல்லாம், அணைகள் கட்டுவதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் அதற்கான விதிமுறைகள் மீறப்படாமல், ஒப்பந்தம் மீறப்படாமல், தமிழக அரசினுடைய முன் ஒப்புதலைப் பெற்று, மத்திய அரசினுடைய முன் அனுமதியைப் பெற்று இந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

ல்

அவர்கள் இந்த 1892, 1924-ம் ஆண்டு ஒப்பந்தங்களை ஒழுங்காகவே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். எதுவரையில் என்றால், 1967-ம் ஆண்டு வரையில், முதலிலே ஹேமாவதி அணைக்கட்டு கட்டுவதற்காக அவர்கள் ஒரு திட்டம் தயாரித்து ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பினார்கள். “ஹேமாவதி ரிசர்வாயர் பிராஜக்ட்” என்கிற இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையாகும். அந்த அறிக்கையிலே அவர்கள் நம்முடைய 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மறந்துவிடாமல் குறிப்பிட்டிருக் கிறார்கள். அதிலே கூறுகிறார்கள் :

"Even though such an amount of water is available, it is not possible to utilise the entire quantity as Hemavathi River is a sched- uled river, governed by the River Agreement of 1924 between Mysore and Madras.

இப்படி அப்பொழுதும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை அதிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். அது மாத்திரமில்லை இன்னும் தெளிவாக ஒரு இடத்திலே குறிப்பிடுகிறார்கள்.

"The project does not affect the utilisation of inter-State inter- ests. The project is designed keeping in view the 1924 Agreement of Mysore and Madras States. The project comes under the purview of the 1924 Agreement."

என்று அவர்கள் ஹேமாவதி ரிசர்வாயர் புராஜக்ட் என்கின்ற இந்தத் திட்டத்தைத் தயாரித்து, அந்த அறிக்கையை மத்திய சர்க்காருக்கு 1964-ஆம் ஆண்டு அனுப்பிய காலத்தில், அதிலே 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை வெகு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

டு