இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6
அடுக்கடுக்கான இந்தத் தொகுப்புகள்
என்பேன்.
1938 முதல் 70 ஆண்டுக்கால என் பொது வாழ்க்கையில் - அரசியல் வாழ்வில் ஓர் அங்கமான சட்டப்பேரவையில் தொடர்ந்து 50 ஆண்டுக் காலம் நான் ஆற்றிய பணிகளை, அந்த அவையில் ஆற்றிய இந்த உரைகள் விளக்கிடும் என்பதில் ஐயமில்லை.
சொல்லாடலில் சூடும், சுவையும்
-
மாறி மாறி காணலாம் அதன் காரணமாக
மனித நேயம்
நாகரிகம்
—
பண்பாடு
இவற்றை அணுப்பொழுதும் மறந்தது
மில்லை; அரசியல் பகை காரணமாக அறவே துறந்ததுமில்லை.
அவற்றில் சிலவற்றுக்குச் சான்று கூற விழைகிறேன். நான் பிறந்த ஊர் திருக்குவளையில் என் அன்னையின் பெயரால் “அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி”யை முதலமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம்தான் திறந்துவைத்தார். என் அன்னை அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எனக்கு முன்பு சென்று என்