பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

காவிரிப் பிரச்சினை மீது

பெறலாம் என்ற முடிவினை அன்றைக்கு நாம் எடுத்தோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதை நன்றாக அறிவார்கள். அப்பொழுதே, முதலமைச்சர்கள் பேசும்பொழுதே, கே. எல். ராவ் அவர்களுடைய முன்னிலையில் ஒன்றை உறுதி எடுத்துக் கொண்டோம். இந்தச் சிக்கலான பிரச்சினையில் முதலமைச்சர்கள் தொடர்ந்து எந்தவிதமான அறிவிப்புகளும், அறிக்கைகளும் வெளியிடுதல் கூடாது. இது முடிவு அடைகிற வரையிலே யாரும் என்கின்ற ஒரு அறிக்கைகள் விடத் தேவையில்லை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டோம். அதை ஒப்பந்தமாக எழுதவில்லையென்றாலும், அந்த உறுதியை எடுத்துக் கொண்டோம் என்பதற்கு அடையாளமாக இதுவரை எந்த அமைச்சரும் இதைப்பற்றிப் பேசாமல் இருந்தோம். அதுவே அப்படி ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொண்டோம் என்பதற்கு ஆதரமாகும். ஆனால் திடீரென்று 2, 3 நாட்களுக்கு முன்பு மைசூர் மாநிலத்தினுடைய முதலமைச்சர் ஒரு அறிக்கையை விட, நம்முடைய நிருபர்களெல்லாம் என்னைச் சந்தித்துக் கேட்ட நேரத்திலும், ஜாக்கிரதையாகச் சொன்னேன். மத்திய அமைச்சருடைய முன்னிலையில் இப்படி ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறோம், அதற்கு மாறாக எந்த அமைச்சரேனும் அறிக்கைவிட்டால், அதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கு இருக்கிறது என்று நான் சொன்னேன். அப்படிச் சொன்ன பிறகாவது மத்திய அரசு கொஞ்சம் கண் திறந்து, செவி திறந்து இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக, முதலமைச்சர்கள் இதில் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு முன்பு அவர்கள் இப்படி யெல்லாம் அறிக்கைவிடுவது முறையல்ல என்று கூறியிருப்பார் களானால், நான் மகிழ்ச்சியடைந்திருக்க முடியும். மத்திய அரசு அதிலே வாளாவிருந்துவிட்டது. அதைப்பற்றி எந்தவிதமான கவலையும் செலுத்தியதாக நமக்குத் தெரியவில்லை. அவர்களுக்கிருக்கிற பல்வேறு பிரச்சினைகளிலே காவேரிப் பிரச்சினை ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை; ஆனால் இது தமிழர்களுக்கு வாழ்வுப் பிரச்சினை, எதிர்காலப் பிரச்சினை. இந்த நிலம் எதிர் காலத்தில் இருண்டு பாழடைந்துவிடக்கூடிய பிரச்சினை. நான்கு கோடி மக்களில் பெரும் பகுதி மக்கள் சாகவேண்டிய பெரும் பிரச்சினை என்பதை மத்திய அரசு உணர வேண்டுமென்று நான் இந்த நேரத்திலே மிகக் கண்டிப்பாக