பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

93

தேசிய அளவில் பல பிரச்சினைகளை அணுக வேண்டுமென்ற அறிவுரை மிகப் பெரியவர்களால் நாட்டுக்கு வழங்கப்படுகிறது. நம்முடைய நண்பர் திரு. ஹாண்டே அவர்கள் கூட பேசுகிறபோது இந்திய ஒருமைப்பாடு பற்றி பேசிவிட்டு, ஒரு மாநிலத்தை இந்த அளவுக்கு வறண்டு போகவிடலாமா, அதற்கு மத்திய அரசு துணைபோகலாமா என்ற கருத்துப்பட ஒரு கேள்வியை எழுப்பினார்கள்.

கர்நாடக மாநிலம் காவிரியினுடைய பயனைப் பெறவே கூடாது என்பது நம்முடைய வாதம் அல்ல. காவிரி கர்நாடகத்திலே தோன்றி தமிழகத்திலே நீண்ட நெடுநாட்களாகப் பயனை வழங்கிக்கொண்டிருக்கிற ஒரு பெரும் நதியாகும். இந்தியாவிலே இருக்கிற 4, 5 பெரிய நதிகளில் காவிரி நதியும் ஒன்று.

அந்தக் காவிரி நதி, கர்நாடகத்தைப் பொறுத்தவரை தமிழகத்துடன் ஒப்பிடுகிற நேரத்தில் மிகக் குறைவான ஆயக்கட்டுகளுக்குத்தான் பாசன வசதி தந்துகொண்டிருக்கிறது. அதில் இருந்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கர்நாடக அரசு கருதுவதும், கர்நாடக மக்கள் விரும்புவதும் இயற்கை. அதை நாம் மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தில் தமிழ்நாடு ஏற்கெனவே அனுபவித்து வந்த பாத்தியதையை, பயனை இழந்துவிட்டு, ஏற்கெனவே இருக்கிற ஆயக்கட்டுகளை எல்லாம் எல்லாம் காய காய வைத்துவிட்டு, இனிமேல் புதிதாகத் தோன்றப்போகிற கர்நாடக ஆயக்கட்டு களுக்கு காவிரித் தண்ணீரை வழங்குவதில் தேசிய அளவில் என்ன லாபம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

121

திரு. பொன்னப்ப நாடார் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். கிருஷ்ணா அவார்டு என்பதன் வாயிலாக கர்நாடக மாநிலத்திற்கு 500 டி.எம்.சி. தண்ணீர் கொடுப்பதற்கு வழிவகை காணப்பட் டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அவார்டு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 500 டி.எம்.சி. தண்ணீரே தங்களுக்குப் போதாது என்று கர்நாடகம் வாதிடுவதாகச் செய்திகள் வருகின்றன. அந்த 500 டி.எம்.சி. தண்ணீரை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களானால் காவிரி தண்ணீரை அவர்கள் பயன்படுத்த வேண்டுமென்கின்ற நிலையே எழாது என்பதுதான் நம்முடைய எண்ணம். அதற்காக அவர்கள் காவிரித் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது என்று நாம் வாதமிடவில்லை.