பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

95

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : திரு. ஹாண்டே முழுக்க முழுக்க நமக்கு ஆதரவாகத்தான் சொல்கிறார்கள். "நீங்கள் ஏன் 50 டி.எம்.சி.தான் குறைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லியிருக்கக் கூடாது” என்று கேட்டார்கள்.

அமைச்சர்

மாண்புமிகு பொதுப்பணித்துறை குறிப்பிட்டதைப் போல 50 டி.எம்.சி. தான் குறைத்துக்கொள்ள முடியும் என்று பேச்சைத் தொடங்கி பிறகு 60 டி. எம். சி. குறைத்துக்கொள்வது என்று பேச்சைத் தொடங்கி பிறகு 80 டி.எம்.சி. என்கின்ற அளவில் ஒப்புக்கொண்டு இரவு பத்து அல்லது பதினோரு மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இந்த 20 டி.எம்.சி. தான் தடையாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜகஜீவன்ராம் அவர்களும் திரு. பந்த் அவர்களும் குறிப்பிட்ட காரணத்தினால் ஒப்பந்தம் கையெழுத்தானால் போதும் என்கிற அளவில் நூறு டி.எம்.சி.யை 15 ஆண்டுகளில் குறைத்துக்கொள்ள தயாராய் இருக்கிறோம் என்று தெரிவித்தோம். இதையும்கூட தமிழக அரசின் சார்பில் நான் முதலமைச்சர் என்ற முறையிலோ தமிழக மந்திரிகள் என்கிற முறையில் நாங்களாகவோ இந்த முடிவை அறிவித்துவிடவில்லை என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிவார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு கூட அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டத்தை நமது தமிழக தலைமைச் செயலகத்தில் கூட்டி - நீங்கள் தண்ணீரைக் கொஞ்சம் மிச்சப்படுத்திக் கொள்ள முன்வந்தாக வேண்டும் என்று கேட்டால் அதற்கு இணக்கம் தெரிவிக்கலாமா என்று கேட்டு – அனைத்துக் கட்சித் தலைவர்களது சம்மதத்தைப் பெற்று - அதன் பிறகுதான் தண்ணீரைக் குறைத்துக் கொள்ள 100 டி.எம்.சி. அளவுக்கு ஒப்புதலை வழங்கினோம்.

பொதுப்பணித்துறை அமைச்சர் குறிப்பிட்டதைப்போல இரவு ஒரு மணி ஒண்ணரை மணிக்கு ஒப்பந்தத்திற்கான வரைவுத் தாள்களைக் கொண்டுவந்தபோது "நாங்கள் பேசியதற்கும் அந்த வரைவுத் தாள்களுக்கும் நிரம்ப வேறுபாடுகள் இருந்தன. ஆகவே, கொள்கை அளவில் ஒப்பந்தத்தாள் இருக்கிறது. ஆனால் சில நுணுக்கங்கள் ஆபத்தை விளைவிக்கின்ற அளவில் அமைந்திருக்கின்றன. ஆகவே அதை ஒத்துக்கொள்வதற்கில்லை" என்று குறிப்பிட்டோம். அந்த வரைவுத் தாள்களைத் தமிழக அரசும் சரி, கேரள அரசும் சரி கர்நாடக அரசும் சரி ஒத்துக்