பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

காவிரிப் பிரச்சினை மீது

அணைகளைக் கட்டுவதற்கான உதவிகள் மத்திய அரசின் சார்பில் செய்யப்பட்டிருக்கின்றன. திரு. வீரேந்திரபட்டீல் ராஜீனாமாச் செய்து அந்த மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் கர்நாடக பட்ஜெட்டில் இந்த அணைக்கட்டுத் திட்டங்களுக்குப் பணம் ஒதுக்கப்பட்டு - பாராளுமன்றத்தில் இதற்கு மறைமுகமாக மத்திய அரசின் ஆதரவு இருந்திருக்கின்றது என்பது கண்கூடான விஷயம். இதை மத்திய சர்க்காரைக் குறைகூற வேண்டுமென்று சொல்லவில்லை.

மத்திய அரசு இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் கபினி தண்ணீர் நமக்குக் கிடைக்கும். இன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற நிலங்களை வற்றவிட்டு, பாழாக்கிவிட்டு மற்றொரு மாநிலம் வாழவேண்டுமென்ற அளவுக்கு குறுகிய எண்ணம் படைத்ததாக மத்திய அரசு இருக்குமென்று நான் கருதவில்லை. அல்லது பேச்சுவார்த்தைக்கு நிபந்தனையாகவும் போடவில்லை. பேச்சுவார்த்தைக்கு மனம் பக்குவமடைய வேண்டும். பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை ஏற்படவேண்டுமானால் குறைந்தபட்சம் கபினி அணையில் தேக்கிவைத்திருக்கிற தண்ணீரை - இப்போது காய்ந்து கொண்டிருக்கிற தஞ்சை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக விடுவிக்கின்ற முயற்சியை மேற்கொண்டால்தான் பேச்சு வார்த்தையில் ஏதாவது பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற இயலும். அந்த வகையிலே இந்த ஒத்திவைப்புத் தீர்மானங்களின் மூலமாக இந்தக் கருத்துக்களைச் சொல்வதற்காக வாய்ப்பு கொடுத்தமைக்கு நான் ஒத்திவைப்பு தீர்மானங்களைக் கொடுத்தவர்களுக்கெல்லாம் நன்றியைத் தெரிவித்து இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறார்கள் என்கின்ற அந்தப் பெருமைமிக்கச் செய்தியினைத் தெரிவித்து. இதற்கு மேல் இப்பிரச்சினையை அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதைத் தலைவரவர்களே தங்களுக்குத் தெரிவித்து அமர்கிறேன்.

திருமதி. த. ந. அனந்தநாயகி : சபாநாயகர் அவர்களே, 1924-ம் ஆண்டு அக்ரிமெண்ட்படியே, மைசூர் ஏதாவது புது அணைக்கட்டுகளைக் கட்ட வேண்டுமென்றால் நம்முடைய