பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - காவிரி

மக்கள் பெறவேண்டிய பேறுகள் பலவற்றுள்ளும் சிறந்தன அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கே என்றும், அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின் நூல்களால் கூறப் படுவன ஏனைய மூன்றேயாம் என்றுங் கூறுவர். இம் முப்பொருள்களையும் அகம், புறம் என்ற இரண்டனுள் அடக்கினர் நம் முன்னோர். அவர்கள் அகத்தே இன்பம் ஒன்றினையும் புறத்தே ஏனை இரண்டினையும் அடக்கிச் செல்லுதலையும், அகப்பொருள் பற்றிக் கூறும் நூல்கள் மிகப் பலவாய், புறப்பொருள் பற்றிக் கூறும் நூல்கள் சிலவாய் இருத்தலையும் நோக்க, முன்னோர் அரசியல் அமைதியும் வாழ்க்கை அமைதியும் பெற்று வாழ்ந்த பெரும்பேறுடையராவர் என்பது புலனாம் ; என்னை, அவ்விரண்டும் செம்மையுற்ற காலத்தே தான்் மக்கள் இன்பநிலைபற்றி எண்ணுதல் கூடும். ஆகலின் , பிசிராந்தையார், யாண்டு பலவாகவும் நரையிலவா தற்கு, மனைத்தக்க மாண்புடைய மனையாளையும் அறிவறிந்த மக்களையும், குறிப்பறிந்து பணியாற்றும் இளையரையும், அல்லன புரியாது ஆட்சி புரியும் அரச னையும், ஆன்று அவிந்து அடங்கிய ஆன்றோர் பலர் வாழும் ஊரினையும் பெற்றிருந்தமையே காரணங்களாம் என்று கூறுவதே போதிய சான்றாதல் அறிக.

இனி, அகமாவது, உருவானும் நலத்தான்ும் ஒத்த தலைவனும் தலைவியும் அன்பாற் கூடித் தமர் அறியா மல் களவில் ஒழுகிப்,பின்னர்த் தமர் அறிய மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லறமாற்றிக் "காமம் சான்ற கடைக்கோட்காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு சிறந்தது பயிற்றல்' ஆய ஒழுக்க நிகழ்ச்சிகள் பலவற்றையும் கூறலேயாம்,

இவ்வாறு இன்ப வாழ்க்கை மேற்கொண்ட தலை மக்கள் கூடுதலும், இடையிடையே கல்வி பொருள்