பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா., கோவிந்தன் 99.

அவற்றின் அருகே செல்கின்றாள்; தன் உடன் ஆடும் ஆயத்தாரை தினைக்கின்றாள்; அத்தோ! என் உயிர் அனைய தோழியர் இவற்றைக் கானுந்தொறும் என்னை நினைந்து வருத்துவரே! அவர்கள் நிலை மிகவும் வருந்தத் தக்கது.காண்!"எனக் கூறிப் பிரிய மனமின்றி நிற்கின்றாள். இந்நிகழ்ச்சியைத் தலைவி அறியாமல் கண்டு நிற்கின்றாள் தோழி; விரைந்து தலைவனிடம் செல்கின்றாள்; சென்று. "தலைவ! எம் தலைவியின் நிலை இத்தன்மைத்து; ஆதலின் கொண்டுதலைக்கழிதல் ஏற்றதன்று; விரைந்து வரைந்துகோடலே நலம் பயப்பதாம்” என்று கூறு கின்றாள்;

'விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்

பாசத் தின்ற தேய்கான் மத்தம் நெய்தெரி யியக்கம் வெளிமுதன் முதுங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரத்து தன்கால் அரியமை சிலம்பு கழிiஇப் பன்மாண் வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள், இவை காண் தோறும் நோவக் மாதோ அளியரோ அளியர்னன் ஆயத் தோரென தும்மொடு வரவுதான்் அயரவும் -

தன்வரைத் தன்றியும் கது.இந்தன கண்ணே. (தற். 62). பன்னாள் கழிகின்றன. தலைவனும் வரைத்து கொள்ள முயற்சிக்கின்றான் இல்லை; தமரும் தலைவியின் துயரைப் போக்க முயலுகின்றார் இல்லை; இந்நிலையில், தலைவி உள்ளமும் தலைவனுடன் செல்லுதற்கேற்ற நிலையில் சிறிது காழ்ப்படைந்து நிற்கின்றது. இவற்றை யெல்லாம் கண்ட தோழி ஒருநாள் வைகறைப்போதில் தலைவியைத் தலைவன்பால் கொண்டு சேர்த்துக் கை யடுத்தல் செய்வாள், "தலைவ! இயற்கைப் புணர்ச்சிக் காலத்துப் பிரியேன், பிரியின் தரியேன்” என்று கூறிய நின்