பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 103

கறுத்த அனலையுடைய காளை ஒருவனின் பொய்ம். மொழியே தனக்குப் பற்றுக்கோடாகக் கொண்டு, . கடத் தற்கரிய சுரத்தே சென்றனள். இதை யான் எங்ங்னம் ஆற்றுவேன்' என்று வாய்விட்டுப் புலம்புகின்றாள்.

'இல்லெழு வயலை பீற்றா தின்ற்ெனப்

பந்துநிலத் தெறிந்து பாவை நீக்கி யவ்வயி றலைத்தவென் செய்வினைக் குறுமகள் மானமர் பன்ன மையல் நோக்கமொடு யானும்,தாயும் மடுப்பத் தேனோடு தீம்பா லுண்ணாள் வீங்குவனள் விம்மி நெருநலும் அனையள் மன்னே; இன்றே மையணற் காளை பொய்புக லாக அருஞ்சுரம் இறந்தனள் என்பதன் - முருந்தேர் வெண்பன் முகிழ்நகை திறந்தே."

- - - (நற்.173) இவ்வாறு வருந்துவாள் உள்ளத்தை மேலும் வருத்தும் முறையில் ஊரார் கூறும் அலர் உரை அவள் காதில் படுகின்றது; வருத்தம் மிகுகின்றது: வாய்விட்டுப் புலம்புகின்றாள்; “சின்னாட்களுக்கு முன் பிறந்த எருமையின் கன்று, ப்சிய பூந்தாதுகள் உதிர்ந்து, கொள் வார் இன்மையால், எருவாகிக் கிடக்கும் தொழுவத் திடத்தே துயிலும் வளமிக்க மாளிகையில் என்னைத் தனியே விட்டு, தலைவன் கூறும் பொய்யுரைகளையே மெய்யெனக் கொண்டு மயங்கி, அவனுார் அடைந்து மணக்க விரும்பி, சுரத்திடை அவன் பின்னே சென்று, நீர் வேட்கை மிகுதியால், வழியிற் காணும் நெல்லிக்காய் களைத் தின்றும், நீர் வறண்ட சுனையில் உள்ள மிகச் சில வாய கலங்கல் நீரைப் பருகியும் செல்லும் என் மகளைப் பின்சென்று காணுதற்கு முன்பே, என் உயிரைக் கொண்டு செல்லாத கூற்றம் இறந்தொழிவதாக' (நற். 271) எனக்