பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - sPa岛f

கூறும் முகத்தான்் தன் துயர் உறு உள்ளத்தை வெளிக்குக் காட்டுகின்றாள்;

இவ்வாறு வருந்திப் புலம்புவாள், துன்பம் கழியப் பெருகுதலால், இவ்வளவிற்கும் காரணமாய தலைமகனை நினைக்கின்றாள்; அவனைப் பழிப்பின் தன் மகளுக்கே ஏதமாம் என அஞ்சி அவனை ஈன்ற தாயைப் பழிப்பாள், 'விழாக்கள் மலிந்த இவ்வூரில், என் மகளுடன் கூடி விளையாடும் ஆயத்தாரைக் காணும்போதெல்லாம். நடுக்கமுற்றுத் துன்புறும் என்னைப்போன்றே, என் மனை யகத்திருந்த அழகிய கூந்தலை உடைய என்மகளைப் பல வாய மாயப்பொய்மொழிகளைக் கூறி மருட்டித் தன் வழி ஒழுகச் செய்து, தன்னுடன் அழைத்துச்சென்ற வன் கண்மை மிக்க அக் காளை போன்றானை ஈன்ற தாயும் நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்து அழிவாளாக" (நற்றிணை, 293) என்று கூறிப் பழிக்கின்றாள்.

"வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை' என்றெல்லாம் தன் மகளால் பழிக்கப்பெறும் தாய், தன் மகள் அயலான் ஒருவனுடன் சென்றாள் என்பது குறித்து வருந்து கின்றாள் எனினும், "உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்” என்பதை அறிந்தவளாதலின், தன்மகள், தக்கான் ஒருவனுடன் சென்ற செயல் தக்கதே என்னும் கருத்தே உடையளாய் இருப்பள். தன் மகள் தலைவன் ஒருவனுடன் சென்றுவிட்டாள் என்பது குறித்து வருந்தும் தாய் ஒருத்தி, மணல் பரந்த அழகிய மாளிகையின் முற்றத்தே ஒரைய்ாடும் மகளிரையும், அவர்கள் ஆடிட மாகிய நொச்சி வேலியையும் காண்தொறும் கலுழும் என்னைக்காட்டிலும், அவள் வளர்த்த கிளியும் அவளை விளித்து அழும்; இவ்வாறு யாங்கள் வருந்தப் பிரிந்து சென்ற என் மகள் குற்றம் உடையாள் அல்லள்; அவள் கொண்ட காமமோ மிகவும் வியப்புடைத்து, மூதூர்