பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 107

மருகனும் போன்றே வேற்றுார் நாடிச் செல்லுகின்றனர் என்பதையும் உணர்கின்றாள். உணர்ந்தவள், இவர்கள் வருங்கால் தம் மகளைக் கண்டு இருத்தல்கூடும் என்னும் துணிவுடன் ஆண்டு வரும் தலைமகனை நோக்கி, "வடிவாலும், செயலாலும் ஒத்திருக்கும் உங்களைக் கண்டு என் மகளும் மருகனும் மீண்டுவந்து விட்டனர் என எண்ணி உளமிகக் களித்தேன்; உங்களைப் போன்ற இரு வர், தலைவனும் தலைவியுமாகச் சென்றவரை வழி யிடைக் கண்டதுண்டோ? கண்டீராயின், அவர் செல்லும் திறத்தைக் கூறுவீராயின் நுமக்கு அறம் உண்டாம்" என்று வினவுகின்றாள். ஆதுகேட்ட தலைமகன் 'அம்மா! என்னை ஒத்த, கொல்லும் ஆனேறுபோலும் ஆண்மகன் ஒருவன் சென்றதை யான் கண்டேன்' என்று விடையளித்து விட்டுத், தன்னருகிருக்கும் தலைவியை நோக்கித் 'துரண்டா விளக்கனையாய்! அன்னை அவன் அயலே யாரோ இருந்ததாகக் கூறுகின்றார்களே, அவர்களைப் பற்றி நினக்கு யாதேனும் தெரியுமா? தெரியுமாயின் கூறுவாயாக’ எனக் கூறுமுகத்தான்், உடன் சென்ற இரு வரில், "ஆண்மகனை மட்டிலும் யான் கண்டேன்; பெண் மகளைக் கண்டேன் இல்லை" என்று கூறி ஆண்மக்களின் கற்புநெறி இத்தகைத்து என நிறுவுகின்றான். இவ்வாறு மகளிர்க்கே உரித்து எனப் பிழைபடக் கருதப்பட்ட கற்பு நெறி ஆடவர்க்கும் உண்டு என்பதை நிறுவிச் செல்லும் அத் தலை மகன் உரை கண்டு, .

  • புருட ரே புலையர் நிலையிலாப் பதடிகள்;

இருளடை நெஞ்சினர்; ஈரமில் உளத்தர் ஆணையும் அவர்க்கு ஒரு வீண் உரை; அறிந்தேன்; தந்நயம் அன்றிப் பின்னொன்று அறியாக் - காதகர்; கடையர்; கல்வியில் கசடர். கேடுஅவர் (பெண்கள்) உறுவ திங் காடவர் உருவு - - - கொண்டு