பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 119

"சேறும் நாமெனச் சொல்லச் சேயிழை

நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர் ஆடவர்; அதுவதன் பண்பே,' (நற். 24)

பிரிந்து சென்ற தலைமகன், இடைச்சுரத்தே தலை மகளை நினைந்து புலம்புகின்றான்: ‘'என் நெஞ்சம், "இருண்ட கூந்தலையும், மையுண்ட கண்ணையும் உடைய தலைவியிடத்தே செல்வோம்; சென்று பிரிவினால் உண்டாய அவள் துயரைப் போக்குவோம்’ என்று கூறா நிற்கும். என் அறிவோ எனின், தொடங்கிய வினையை முற்றுப் பெறச் செய்து முடித்தல் இன்றி இடையே மடங்குவோமாயின், அச்செயல் நமக்கு அறியாமை யுடனே பழியையும் தரும். ஆதலின், நெஞ்சே! சிந்தித் தலின் றி ஒன்றையும் துணிந்து விடாதே’ என்று கூறா நிற்கும். இவ்விரண்டன் மாறுபாட்டுக்கிடையே நின்ற என் உடல், களிறுகள் ஒன்றோடொன்று பற்றி ஈர்த்தலி னாலே தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இறு வதைப் போல அழிய வேண்டியதுதான்்" என்று வருந்து கின்றான்.

'புறந்தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்; செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யா மையோடு இளிவு தலைத் தருமென உறுதி தூக்கத் தூங்கி அறிவே o சிறிது நணி விரையல் என்னும்; ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறுபற்றிய தேய்புரிப் பழங்கயிறு பேர்ல. - - 'விவது கொல்லென் வருந்திய வுடம்பே: , , ,

鷲。經 *鯊為*

(நற்.284)