பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - காவிரி

வருந்திய தலைமகன் இறுதியில் தன் நெஞ்சை நோக்கி, 'நெஞ்சே! இவ்வாறு வருந்துவதைக் காட்டி லும், இரண்டில் ஒன்று துணியின் நலமாம். ஆகவே, பொருள், ஈட்டும் முயற்சிகொண்டு செல்வாம் எனினும், அன்றி மீண்டு ஊர் புகுவாம் எனினும் யான் தடுப்ப த்ொன்றதில்லை;இரண்டினுள் நீ துணிந்ததொன்றினைக் கூறு அதன்படி நடத்தலே முடிபாம்' (நற். 103) என்று கூறி மேற்செல்லுகின்றான். நிற்க;

குறித்த பருவம் எய்தவும் தலைவன் வராமை கண்டு தலைவி வருந்துவாள், அவளைத் தேற்றுதல்வேண்டும் என எண்ணித் தலைவியால் செல்லுகின்றாள் தோழி சென்றவள், தான்் எண்ணியதற்கு மாறாகத் தலைவி ஆற்றியிருப்பது கண்டு வியப்புற்றுத் 'தலைவி! இதோ பார், உலகில் உள்ள உயிர்த் தொகுதிகள் எல்லாம் விரும்பி எதிர்நோக்க, மேகங்கள் வலமாக எழுகின்றன. இஃது அன்றோ அவர் வருவேன் எனக் குறித்துச் சென்ற காலம். இக்காலை அவர் வராதிருத்தலைக் கண்டும், அதுபற்றி வருந்தாது இருக்கின்றனையே; இஃது என்ன வியப்பு' (நற். 237) என்று வினவுகின்றாள். அதற்குத் தலைவி, "தோழி! யான் அவர் சென்ற வழியின் அருமை குறித்தும், அவர் வராமை குறித்தும் வருந்துகின்றேன் எனினும், தான்் செல்லும் நெறியில், நீர் நசையால் வருந்திய பிடியானையின் துன்பத்தைப்போக்கக் களிற்றி யானை பல்லிடம் சென்று தேடி இறுதியில் கல்வின் கண் ஊறி நிற்கும் நீரைக் கண்டு, தன் நீண்ட துதிக்கை நிறைய அந்நீரை முகந்துகொண்டு தன் பிடியானையை நோக்கி விரைந்து ஒடுவதைக் காணும் அவர், தாமூம் பொருள் சட்டிய உடன் விரைந்து பொருளுடன் வந்து என்னை இன்புறுத்துவர் என்னும் துளிக்டையேன், ஆதவின் ஆற்றியுள்ள்ேன்" (தற். 188) என்று விடையிறுக் கின்றாள். - .