பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர், கா. கோவிந்தன் 123

செய்யவும் மாட்டார்; அரசர், தம் கோல் உயர்தற்கு ஏதுவாம குடிமக்களின் வளப்பம் எல்லாம் கெடுமாறு: அவர்தம் இடத்து இருந்து வரிகளைக் கொள்ளுதலும் இலர். இவற்றையெல்லாம் அறிந்தும் நம் தலைவர், நம்மை ஈண்டே விட்டுப் பிரிந்தார் ஆதலின், அவர், தாம் பிரியாது உறைதலினாலேயே எம்முடைய உயிர். நிற்கின்றது என்ற உண்மையைப் அறிந்தவர் அல்லர். இதுவே ஆடவர் இயற்கை என்பர் ஆன்றோர். (நற். 226) என்று கூறி வருந்துகின்றாள். வருந்திய தலைவி இறுதி யாக, "இவ்வாறு, தம்மால் அன்பு செய்யப்பட்டாரது உயிர் நீங்கவும் பொருள் கருதிப் பிரிதல் ஆடவர்க்கு இயல்பு எனின், அரிதுமன் றம்ம, அறத்தினும் பொருளே e (நற். 243) என்று கூறி உளம் சலித்து உரையடங்கு கின்றாள்;

இவ்வாறு, தலைவி ஆற்றாளாயினது கண்ட தோழி. தலைவியை நோக்கி, "தோழி! நீ நெடிது வாழ்வாயாக. முகிலும், நொச்சியும், முல்லையும் மலருமாறு கார்ப் பருவம் செய்யத் தொடங்கிவிட்டது. ஆதலின், தலைவர் மிகச் சேய்மைக்கண் உள்ள நாட்டினராயினும், நின்பால் பேரன்பினர் ஆதலின் நில்லாது வருவர்; அவர், தாம் கருதிய வினையை முடித்தலினால் நிறைந்த புகழைப் பெறுவதாயினும், இனி நில்லார்' (நற். 115) எனவும், "தலைவர் சிறந்த அன்பினர்; அன்றி யும் மெல்லிய இயல்பும் உடையவர்; ஆதலின், பிரிந் துறையும் நம்மைக் காட்டிலும் மிக வருந்தித் தாம் கருதிச் சென்ற அளவு பொருள் கைவரப் பெறாது ஒழியினும் நில்லாது வருவர்; அத்துடன் இம்மேகத்தின் இடியோசை இன்துனைப் பிரிந்தாரைத் தேடிக் கொணர்வதுபோல் உளது. ஆதலின் நீ வருந்தற்க' (நற். 208) எனவும், 'செறிந்த இருள் சூழ்ந்த நடு யாமத்தில், நம் தலைவரை உள்ளுந்தோறும், நன்மை தரும் குரலையுடைய பல்லி