பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காவிரி.

சுவரிலே பொருந்தி நின்று ஒலிக்கும்" (நற். 333) எனவும் கூறித் தேற்றுகின்றாள். . . . . . . .

இவ்வாறு, தோழி, பலப்பல கூறித் தேற்றுவது கண்ட தலைவி, தோழியை நோக்கித் தோழி தலைவன் குறித்த காலத்து வாரானாயினமையின், என் தோள்களும் மெலிந்து பொலிவு குன்றின; அவன் வரும் வழியைப் பல்காலும் நோக்கி நோக்கி என் கண்களும் காணும் இயல்பை இழந்தன. நினைப்பு மிகுதியால் என் அறிவும் மயங்கி வேறுபட்டு விட்டது; உயிர் போம் வழி, நோயையும் உடன்கொண்டு போவதல்லது அதைத்' தனித்துவிட்டுச் சேறல் இல்லையாதலின், இறக்கும் நிலை யிலுள்ள என்னைப் பற்றியுள்ள நோயும் என்னைவிட்டுப் பெயர்ந்து விட்டது; பிரிந்தார்க்குத் துன்பத்தைச் செய்யும் மாலையும் வந்துவிட்டது. இனி என் நிலை என்னாம்?-நான் இவ்வாறு கொண்டு தோழி! யான் இறப்பைக் கண்டு அஞ்சுகின்றேன் என்று நினையல்: சாதல் அஞ்சேன்; ஆனால், இறந்து மறு பிறப்படைந்: தால், அப்பிறப்பில், இப்பிறப்பில் என்னால் அன்பு செய்யப்பட்ட என் தலைவனை மறந்துவிடுவேன்கொல்? என்றே அஞ்சுகின்றேன்' என்று தன் அன்பின் முதிாச்சி யைக் காட்டுகின்றாள்.

"தோளும் அழியும் நாளும் சென்றன . நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக் ஆண்ணும் காட்சி தெளவின; என்நித்து

அறிவும் மயங்கிப் பிறிதாகின்றே; நோயும் பேரும்; மாலையும் வந்தன்று; யாங்கா குவென் கொல் யானே? யீங்கோ

சாதல் அஞ்சேன் அஞ்சுவல், சாவின்