பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிரி

மகன் திப்புசுல்தான்் ஆகிய இவர்களின் கல்லறைகள் மூன்றும், பார்ப்பார் கண்கள் பரவசமடையும் நிலையில், தன்னகத்தே அமைந்து விளங்க, விளங்குகின்றது.

இங்கிருந்து நான்கு காவதம் வரையில் காவிரி, சம நிலங்களில் பல ஊர்களிடை பல நீர்நிலைகளை நிரப்பிக் கொண்டு ஓடி, இருபிரிவாகப் பிரிந்து, சிவசமுத்திரம் என்னும் இடத்தை, இரண்டாவது ஆற்றிடைக்குறை யாக்குகின்றது. அவ்வாற்றிடைக் குறைக்குச் செல்வான் வேண்டி, இந்தியர்களால் கட்டப்பெற்ற, சேது (bridge) தமிழர்களின் சிற்ப வன்மை இற்று, என்பதைத் தெரிவிக் கின்றது. பல கற்களையும், பாறைகளையும் ஆற்றிடை யிட்டு, அதன்மேல் பக்கத்திற்கு நூறு கம்பங்களாக இருநூறு கம்பங்களை நாட்டி, அவைகளின் மேல் கனத்த கல் தூலங்களையிட்டு, அருந்திறல் அரவமொன்று வளைந்து வளைந்து செல்வதேபோல, வழி ஒன்று செய். யப்பட்டுள்ளது. -

இச் சேது வினின்றும் அரைமைல் துலைவில், காவிரி உயர்ந்த மலையினின்றும் கீழே விழுகின்றது. இது சிவ. சமுத்திரம் நீர் வீழ்ச்சி எனப் பெயர் பெறும்.

இங்கிருந்து வந்து காவதம் வரையில் கிழக்குமுகமாக, பலமலைகள், குகைகள், காடுகள் இவற்றினிடை, தன் இரு கரைகளிலும், புள்ளி மான் கன்றுகள் பல துள்ளவும், புலி போன்ற கொடிய விலங்குகள் பல திரியவும், ஒடு கின்றது. ஈண்டு இதன் இரு கரைகளும் இருநூற். றைம்பது அடி உயர முள்ளதாக இருத்தலின், எத்துணை தூரம் நோக்கினும், ஒரு சிறு கிராமமாவது, மக்கள் நட மாட்டமாவது, அவர்கள் செல்லுதற்கேற்ற வழிகளா வது ஒன்றும் காணப் பெறவில்லை. .