பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவர். கா. கோவிந்தன் 125

பிறப்புப்பிறி தாகுவ தாயின் மறக்குவேன் கொல்? என் காதலன் எனவே."

- (நற். 367)

இவ்வாறு கூறும் தலைவி கூற்று,

"துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு இறப்பன்; இறந்தால், இருவிசும்பு ஏறுவன்; ஏறிவந்து பிறப்பன்; பிறந்தால், பிறையணி வார்சடைப்

- பிஞ்ஞகன்பேர் மறப்பன்கொ வோ? என்று என் உள்ளம் கிடந்து

. மறுகிடுமே.”

என்ற நாவரசர் வாக்கை நினைப்பூட்டி நினைக்குத் தோறும் கழிபெருங் களிப்பைத் தருவதாய் உளது.

இவ்வாறு, தன் அன்பின் முதிர்ச்சி காட்டி ஆற்றா ளாய தலைவி, தலைவனும் அன்புடையன் என்பது நினைத்து, "என் தொல்காவின் தொலையவும் தோள் நலம் சாயவும் என்னை அளிக்காது சென்றார் ஆயினும் அவர் என்பால் அன்புடையர் ஆதலின், விரைந்து மீண்டு வந்து என்னை அளிப்பர்' (நற். 14) என்று கூறி ஆற்றி யிருக்கின்றாள்.

இவ்வாறு ஆற்றியிருக்கும் தலைவி மகிழத் தலைவன் வந்தான்ாக, அச்செய்தியைத் தலைவிக்கு அறிவிக்க விரும்பிய தோழி தலைவி.பால் சென்று, "தோழி! கழன்று விழும் நின்தொடியைக் கண்டு நம் மகன் அழ, அவனு டைய அழுகுரலைக் கேட்டு உளம் மகிழ்ந்து அவனை அணைத்துக் கொள்ளும் நம்முடைய மனம் மகிழத் தலைவரும் வந்து விட்டார்; இனி நீவிர் இருவீரும் இல்லறமாற்றி இனிது வாழ்வீராக! (நற்.212) எனக் கறுகின்றாள்g .