பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காவிதி

பெரியோர்களே!

இதுகாறும் பாலை ஒழுக்கமாய, கொண்டு தலைக் கழித்தல் முதல் பிரிவுவரையிலும் நிகழும் நிகழ்ச்சிகளை ஒரு கோவைப்படுத்திக் கூறினேன். இனி, இதிற் காணப் பெறும் பண்டை வழக்காறு, உவமநயம், செய்யுளின் சிறப்பு இயல்புகள் போன்ற இன்னோரன்ன பகுதிகளை யும் கூறிச் செல்லின் விரியுமென்றஞ்சி விடுத்துச் செல்லு கின்றேன். அறிவுடைப் பெருமக்கள், இன்னோரன்ன பல பகுதிகளை ஆராய்ந்து வெளியிட்டுத் தமிழ்நாட்டைப் பண்டை உயர்நிலையில் நிறுத்த முயல்வார்களாக!

1942பிப்ரவரி, 2 ஆம் நாள், சென்னையில் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமை யில் நடைபெற்ற, நற்றிணை மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவு.