பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சியும் கருத்தும்

உலகில் நிலவும் உயிர்கள் அனைத்தும் பிறப்பால் ஒத் தனவே எனினும், அவை தம்முள் வேறுபடுவது அவை மேற்கொண்டொழுகும் தொழில் வேற்றுமையான் ஆம் என்று வள்ளுவர் கூறுகின்றனர். ஊன்றி நோக்கின் அவ் வேறுபாடு, அவர் தம் தொழில் வேறுபாட்டான் ஆகிறது என்பதினும், அவர் தம் மன வேறுபட்டான் ஆகிறது என்று கோடலே பொருத்தமாதல் விளங்கும். மன வேறு பாடே சொல் வேறுபாடு தொழில் வேறுபாடுகளுக்குக் காரணமாம்; "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.” மனத்துக்கண் மாசில் னாதலே அறமாம்” எனவும், “நினைத்தலும் செய்த லோடு ஒக்கும்” எனவும் கூறப்படுதலும் நோக்காற்பால தாம். "மனம் வேறு, சொல்வேறு, மன்னு தொழில் வேறு" என இவ்வேறுபாட்டு முறைமையைக் காரண காரிய வரிசையில் வைத்து வழங்குவதும் காண்க. மக்கள் தம்முள் ஒத்த உள்ளத்தினராய் இல்லாது, வேறுபட்ட உள்ளத்தினராய் இருத்தலான் அன்றே, பிறப்பு, சாதி, சமயம், மொழி, தாடு, இவை காரணமாகத் தம்முன் பொருது கெட்டழிகின்றனர். - -

இவ்வாறு மக்கள் ஒத்த உள்ளத்தினராப் இல்லாது இகுத்தலின், அவரால் காணப்படும் பொருள் ஒன்றே ஆகவும், கானும் அவர்தம் உள்ளத்தே பல்வேறு கருத்துக்