பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 145,

வழங்கினர்; வேங்கடத் தும்பர் மொழிப்பெயர் தேயம் என்பதை அவர்களேகூறி, ஆண்டு உறைந்தவரை வடுகர் என்றும், அதற்கு அப்பாற்பட்டவரை (விந்த மலைக்கு அப்பாற்பட்டவரை) வடவடுகர் (அக்கால மகத நாட்டி னர்) என்றும் குறித்துள்ளனர்; கோசராவார் வடவடுகர் எனப்படுவர்;இவர் கிழக்கு வங்காளத்தைச்சேர்ந்தவராக லாம் என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் கருது தல் பொருத்தமுடையதே ஆகும்” என்று கூறுவர், திருவாளர் மா. இராசமாணிக்கம் பிள்ளைவர்கள்.

வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங் கினர் நம் முன்னையோர் என்ற அவர் கூற்றை ஏற்றுக் கொள்வதாயின், தங்களுக்கு மிக மிகச் சேய்மைக்கண் உள்ள மோரியரை, அவர் இனப்பெயர் அறிந்து வழங்கிய புலவர்கள், மோரியரை நோக்கத் தமக்கு அண்மையில் வாழ்ந்த கோசரையும் அவர் இனப்பெயர் கொடுத்தே அழைத்திருத்தல் வேண்டும். ஆனால், அவர்களை, அவர் கள் இனப்பெயரால் அழைக்காது, தங்களுக்கு மிக அண் மையில், வடக்கே வாழும் தெலுங்கு கன்னடியரினும் அவர்கள் சேய்மைக்கண் வாழ்வதால், வடுகடர் என்று மட்டும் அழைக்காது, வடவடுகர் என்று அழைத்தனர். என்று கொள்வது, வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங்கினர் என்பதனோடு முரண்படுவதாம். விந்தமலைக்கு அப்பாற்பட்டாரை, வடவடுகர் என வழங் கினர் என்பதற்குச் சான்றாகக் காட்டும் புறநானூற்றுச் செய்யுளில், அச்சொல் மேல்வரிக்கண், தென்பரதவர்' என வந்ததற்கு ஏற்ப, எதுகை நோக்கி வடவடுகர்’ எனக் கூறப்பட்டிளதேயன்றி, திருவாளர் பிள்ளையவர்கள்

2. சோழர் வரலாறு:33, 34. 3. தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்

டிய- புறம் : 378,