பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 காவிரி

கொள்ளும் கருத்தில் கூறப்பட்டிலது. மேலும், வடக்கிற் கும் வடக்கு என்று பொருள்படுமாறு 'வடவடக்கு’ என்ற தொடர் ஆளப்படுதல் வழக்காறன்று.

கோசர் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவர் திரு பிள்ளையவர்கள், இஃது உண்மையாயின்: அவர்கள் தமிழ்நாட்டில் நுழைய விரும்பினர் என்றால், அவர்கள் தமிழகத்தின் வடகிழக்கு வழியாகவே நுழைந் திருத்தல் வேண்டும்; ஆனால், அவர்கள் தமிழகத்தின் வடமேற்கு வழியாக நுழைந்தனர் என்றே திரு. பிள்ளை யவர்கள் கூறுகின்றார்கள். இம்முரண்பாட்டையும்அவர் நோக்கிலர் போலும்! விந்தியமலைக்குத் தெற்கே, சேர நாட்டின் வடஎல்லைக்கண் மேற்குக் கடற்கரையைச் சார்ந்த நாட்டினராக, வரலாற்று ஆசிரியர்களாலும், பழந்தமிழ்ப் புலவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோசரை, விந்தியமலைக்கு வடக்கே துரத்தி, கிழக்கு வங்காளத்தில் வாழச் செய்தமையினாலேயே இத்தகைய முரண்பட்ட முடிவுகளை வெளியிடலாயினர் திரு. பிள்ளையவர்கள். -

மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த காலை அவரோடு கோசர்படையும் வடுகர்படையும் இருந்தன எனவும், அப்படை மூன்றனுள் கோசர்படையே தமிழ்நாட்டினுள் முதற்கண் நுழைந்தது எனவும் கூறுவர் திரு. பிள்ளையவர்கள். திருவாளர் பிள்ளையவர் கள் கொள்கைப்படி, மோரியர் வடகோடியினர், கோசர் இடைப்பட்டவர், வடுகர் தெற்குத் திசைக்கண் உள்ளவர் என்பது முடிபாம்; அஃதாவது, தமிழகத்தின் வடஎல் லையை ஒட்டி முதற்கண் வடுகரும், அவரை அடுத்து வடவடுகராகிய கோசரும், அவருக்கும் அப்பால் மோரிய

1. 2. சோழ வரலாறு: 35.