பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 காவிரி

வெற்றி பெற்றான் என்பது உண்மையே என்றாலும்,' அவன், கோசரையும், அவர்க்குத் தலைமைபூண்டு வந்த மோரியரையும் வென்றான் என்று கொள்வதற்குரிய சான்று ஒன்றும் கிடைக்கப்பெறவில்லை; இளஞ்சேட் சென்னி இவ்வாறு முறியடித்த படையெடுப்பு, மோரியர் படையெடுப்பாயின், புலவர்கள், அவன் மோரியரை முறியடித்ததுபற்றி ஒன்றுமே கூறாது, அம்மோரியர்க்குத் துணையாகவந்த வடுகர், கோசர் இவர்களை முறியடித் ததை மட்டும் கூறினார் எனல் பொருந்தாது. இளஞ்சேட் சென்னி மோரியரை எதிர்க்கவுமில்லை; அவர்க்குத் துணையாக வந்த கோசரை அழிக்கவுமில்லை; அவர் அவ்வாறு பொருள் கொள்வதற்குக் காரணமாகிய "வட வடுகர்’ என்ற தொடர் வடக்கே வாழும் வடுகர் என்றல்லது வடுகர்க்கும் வடக்கே வாழ்வோராகிய கோசர் என்று பொருள் தாராது என்று முன்னரே கூறி யுள்ளோம்.

வடுகரை வென்று பாழியைக் கைப்பற்றினான் இளம் பெருஞ்சென்னி என்று கூறும் அவ்வகநானுாற்றுச் செய்யுளில், வரும் "குறைவினை" என்ற தொடருக்கு அரைகுறையாகப் பகைவரை முறியடிப்பது என்று 'பொருள் கொள்கின்றார் திரு பிள்ளையவர்கள். 'குறைவினை” என்பதை அறிவிக்கும், அதே செய்யுள் முதற்கண் "குடிக்கடன் ஆகலின்” என்ற தொடரையும் அறிவிக்கிறது. அத்தொடரையும் இணைத்து நோக்கிய வழிப்பெறப்படும் பொருள்: வேளிர் பெரும் பொருள் சேர்த்து வைத்த பாழியைக் கைப்பற்றுவதைச் சேரரும், வடுகரும் தம் குடிக்கடனாகக் கொண்டதைப்போன்றே, சோழரும், பல தலைமுறையாகத் தம் குடிக்கடனாகக்

3. " தென்பரதவர் மிடல்சாய -

வட வடுகர் வாளோட்டிய ' -புறம் : 378,