பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 காவிரி:

நீருக்குப் பெரிதும் மழையையே எதிர்நோக்கி நிற்கின் றனர் என்றால், அத்தகைய வளர்ச்சியொன்றும் காணாத பண்டைக்கால மக்கள், மழையின் பெருமை உணர்ந்து பாராட்டியதில் வியப்பொன்றும் இல்லை. 'மழையின்றி. மாநிலத்தார்க்கில்லை; "மாரி வறங்கூறின் மன்னுயிர் இல்லை' என்பன அறிஞர் கண்ட வான்சிறப்பு. மழை பெய்து விளைவு மிகுதலால் இன்பம் உண்டாதலை, 'வான் நின்று உலகம் வழங்கி வருதலால், தான்் அமிழ்தம் என்று உணரற்பாற்று” எனவும் "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித், துப்பார்க்குத் துப்பாயது உம் மழை” (எனவும் வள்ளுவர் விளக்கினர்; பெயலும் அதனால் உண்டாகும் விளையுளும் மிகுதியாக இருக்கும் நாட்டில், அரசனும் இயல்புளிக் கோலோச்சுவன் எனச் செங்கோலுக்கும் மழையே இன்றியமையாதது என்று அறிந்திருந்தனர்; மழை பெய்யாது பொய்ப்பதால் உண்டாகும் கேட்டினை, விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உள்நின்று உடற்றும் பசி' என வும், "புயல் என்னும் வாரி வளம் குன்றியக்கால், உழவர், ஏரின் உழார்' எனவும் வானம் பெயல் மறப்பின் அந்நாட்டு அரசனும் முறைகோடுவன்; ஆண்டவற்கு நடைபெறும் விழாவும், வழிபாடும் நடைபெறா; தான் மும், தவமும் தங்கா எனவும் அறிந்திருந்தனர்.

வானோக்கி வாழ்ந்தனரே எனினும், தமக்கு. வேண்டிய நீருக்கு, அவ்வானம் ஒன்றையே எதிர்நோக்கி வாழ்வது பாழ்படு வாழ்வாகவே முடியும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். வானம் ஒன்றையே எதிர் நோக்கிப் பயிர்செய்யும் நிலம், வயல்வயலாகப் பரந்து கிடப்பினும், பயனில்ல்ை என்பதையும் உணர்ந்திருந்: தனர். “வித்திவானோக்கும் புன்புலம் கண்ணகன் வைப் பிற்றாயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உத வாது." ஆதலின், அந்நிலத்திற்கு வேண்டிய நீரைப் பிற