பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 169

காரிக் கண்ணனார் ஒருமைப்பாட்டுக்கு வகுத்த வழி

தமிழகம் தான்் பெற்றிருந்த பெருநிலை இழந்து இன்று தாழ்ந்து கிடப்பதற்குக் காரணம் தமிழ் வேந்தர் கள் தம்முள் ஒற்றுமையின்றி ஒருவரோடொருவர், பகை கொண்டு, ஒருவரை ஒருவர் கொன்றும் ஒருவர் நாட்டை ஒருவர் அழித்தும் வாழ்ந்த அறிவிழந்த வாழ்க்கையினாலேயே ஆம் என்பதை உணர்ந்த காரிக் கண்ணனார் என்ற புலவர், தம் காலத்தில் சோழ நாடாண்டிருந்த குராப்ப்ள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டிய நாடாண்டிருந்த வெள்ளியம் பலத்துத்துஞ்சிய பெருவழுதியும் ஒருவரோடொருவர் பகை கொண்டு போரிட விரும்பாது, நட்பு பூண்டு கலந்து வாழக் கண்டு களிமகிழ்வெய்தினார். அவர்கள் எப் போதும் அவ்வாறே ஒருமைப் பாடுடையராய் வாழின், அவரையோ, அவர் நாட்டையே, அழிப்பார் எவரும் இரார்; மாறாக, அவர்கள் விரும்பினால் விரும்பும் நாடு களிலெல்லாம் அவர்கள் வெற்றிக் கொடியே பறக்கும்.

ஆகவே, அவ்வொருமைப்பாடு நெடிது வாழ விரும் பினார். அதே நிலையில், அவர்களிடையே நிலவும், அவ்வொருமைப்பாடு பொறாத சிலர், அவ்வேந்தர்களின் அவ்வொருமைப் பாட்டுணர்வை அழித்து மீளவும் பகையுணர்வை மூட்டி விடுவரோ என்ற அச்சமும் உடன் எழவே, அவ்வேந்தர்களை அணுகி, "வேந்தர்காள்! உங்கள் நண்பர்களைப் போலவும், உங்களுக்கு நல்லனவே செய்வார் போலவும், உங்கள் முன்னோர் நடந்து காட்டிய நல்வழியைக் காட்டுவார் போலவும், உம்மோடு கலந்து உரையாடி, உங்களிடையே நிலவும் இந்நட்புணர்வை அழித்து, உங்களிடையே மீளவும் பகை வரப் பண்ணி விடுவரோ நும் பகைவர் என்று அஞ்சுகிறது என் உள்ளம்.! அன்னார்-உரைகளை உம் செவியுட் புகவிடாது இன்றே