பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 17t

வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அந்நியர் ஆட்சியால் அவல நிலைக்குள்ளாகி கிடந்த நாட்டிற்கு அண்ணல் காந்தியார் அறப்போர் ஆற்றி உரிமை பெற்றுத் தந்து விட்டுப் பெற்ற உரிமையைப் பேணிக் காக்கும் பொறுப் பைப் பின் வந்தார்க்கு ஒப்படைத்து மறைந்து விட்டார், இப்போது மன்னர்கள் இல்லை; ஆட்சிப் பீடத்தில் மக்கள் தலைவர்கள் உள்ளனர். அம்மக்கள் ஒரு மொழி பேசுவோர் அல்லவர், ஒர் இனத்தைச் சேர்ந்தவர் அல்லர்! ஒரு சமயத்தவர் அல்லர்; மொழியாலும், இனத்தாலும், சாதியாலும் சமயத்தாலும், உணவு, உடை, உறையுள் ஆகிய பழக்கவழக்கங்களாலும் ஒருவர்க்கு ஒருவர் முற்றி இலும் வேறுபட்டவராவர்.

இவ்வேறுபாடுகள் உள்ளவரை, அவர்களிடையே, ஒற்றுமை-ஒருமைபாடு-எங்கே தோன்ற போகிறது என்றே எவரும் எண்ணி மலைப்பர்.

ஆனால் அண்ணல் காந்தியார் அவ்வாறு எண்ணி மலைத்தாரல்லர்.

ஒரே இனத் தொடர்புடையவரும், ஒரே மொழி பேசுவோரும், ஒரே கடவுளை வணங்குவோரும் ஆகிய அம் மக்களிடையே மட்டும் ஒருமைப்பாட்டினைக் காணலாம்! இனத்தால் வேறுபட்டவரும், மொழியில் வேறுபட்டவரும் வணங்கும் கடவுள் நெறியால் வேறுபட்டவரும் ஆகிய அம்மக்களிடையே ஒருமைப் பாட்டினைக் காண்பது

இயலாது என்ற தத்துவத்தைத் தகர்த்து எறிந்தார்.

ஆரியர், திராவிடர் என்றும், ஆந்திரர் தமிழர் என்றும், இந்து முஸ்லீம் என்றும், வேறுபட்டிருந்த நம்