பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:புலவர். கா. கோவிந்தன் 173

அவர்கள் பேசும் ஒரே மொழி, "ஒற்றுமை குலைவதைத் தடுக்கவில்லை; அவர்கள் வணங்கும் ஒரே கடவுள், அவர் கள் பகைத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டுதான்் இருக்கிறார்; தடுக்க முடியவில்லை அவராலும்,

- இந்தியாவில் எத்தனையோ இனம்; எத்தனையோ மொழிகள்; எண்ணித் தொலையாத மதங்கள் இருந்தும் விடுதலைப் போராட்டக் காலத்தில் அவ்வளவு பேரும் ஒன்றுபட்டிருந்தனர்; இன வேற்றுமையோ, மொழி வேற்றுமையோ, மதவேற்றுமையோ, அவர்கள் ஒன்று :பட்டதைத் தடுக்கவில்லை.

அண்ணன் தம்பிகளுக்கிடையே வேற்றுமை ஏன் உண்டாகிறது? பகை ஏன் வளருகிறது? ஒருவரை யொருவர் ஏமாற்றி விட்டமை; ஒருவன் உழைப்பது, ஒருவன் ஊர் சுற்றி வருவது; ஒருவன் பொருள் ஈட்டுவது; ஒருவன் அதை அழிப்பது என்ற இதுதான்ே காரணம், அண்ணன் தம்பிகளுக்கிடையே பொருளில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுவிட்டது. ஒற்றுமை இல்லை. இது தவிர்த்து, வேறு என்ன காரணம்? இருவருக்கிடையே பொருள் அளவில் ஒற்றுமை இல்லை; அவ்வொற்றுமை யின்மை, அவர்களிடையே ஒற்றுமைக்கான காரணங்கள் எவ்வளவோ இருப்பினும், அவர்களை வேறுபடுத்தி விட்டது. அவ்வளவு ஆற்றல் படைத்தது அந்த பொருள் வேற்றுமை. -

மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவது...!

ஆரியர்-திராவிடர் என்றும் ஆந்திரர்-தமிழர் என்றும் இந்து முஸ்லீம் என்றும் வேறுபட்டிருந்தோம் நாம். இருந்தும் ஒன்றுபட்டோம், அந்நியன் ஆட்சிக் காலத்தில். ஆரியர்-திராவிடர் இன வேற்றுமையோ, ஆந்திரர்-தமிழர் என்ற மொழிவேற்றுமையோ, இந்து