பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 175.

அவற்றை ஆற்றும் நிலையில் அவர்களிடையே, மொழி பற்றிய வேறுபாடோ,இனம் பற்றி வேறுபாடோ, மதம் பற்றி வேறுபாடோ ஒரு சிறிதும் தலை தூக்க விடக் கூடாது; அது சிறிது தலை தூக்கினாலும், மக்கள் அவ் வேறுபாட்டுணர்ச்சிக்கு அடிமையாகி, ஆக்கப் பணிகளை அறவே மறந்துவிடுவர்.

உலக ஒருமைப்பாடு உருவாகிட!

ஆகவே, ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்போர் எந்த ஒரு மொழிக்கோ, எந்த ஒரு இனத்திற்கோ, எந்த ஒரு மதத்திற்கோ, தனி ஆதிக்கம் உண்டாக்கக்கூடிய சூழ். நிலையை, எக்காரணத்தை முன்னிட்டும் உருவாக்காது, அனைத்து மொழிக்கும் சமவாய்ப்பும், எல்லா இனத்த வர்க்கும் சமநிலையும், எல்லா மதத்திற்கும் சம உரிமை யும் வழங்குதல் வேண்டும் என்பதில் விழிப்பாயிருந்து விழுமிய ஆட்சி மேற்கொள்வாராயின் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற உலக ஒருமைப்பாட்டு நிலை யினை எளிதில் எய்து விடலாம். வாழ்க அவ்வுலக ஒருமைப்பாடு!

வளர்க அவ்வொருமைப்பாடு!

- வானொலியில் பேச்சு.