பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காவிரி'

பகல் கழிந்த பின்றையே நிகழ்ந்த தென்றும், அவைகளில், நள்ளிரவு முற்பக லாகிய இருபோதினும் கண்டன இருபத்திரண்டே என்றும், டி. அப்பாடி (D. Appadie) என் பவர் கூறுகின்றனர். -

குளிர்ந்த நாடுகளில், இவற்றின் நிகழ்ச்சி மிக அரிது. si 191 -sivuřżægir (Spitsbergen 78. O. N. 15 0B.) என்னும் தீவின் கண் வதிந்த நால்வர்,தாம் வாழ்ந்த ஆறாண்டைய எல்லையில் ஒரு முறையே இடியோசை கேட்டனராம். ஆப்பிரிக்காவில் உள்ள கேப்காலணி, நேட்டால் என்ற இருநாட்டினும், நேட்டால் நீர் வளமிக்கதாகலின், கேப்காலணியில் நிகழும் இடியினும், அதன்கண் நிகழ்தல் மிகக் குறைவு என்று சர் ஜான் ஹர்ஷல் (Sri John Hershel), கூறுகின்றனர்.

இதுகாறும் கூறியவாற்றால், பெருங்காற்றும் மின்ன லும் இடியும் சூடுமிகுந்த நாடுகளில், கோடைகாலத்தே. நாட்காலத்து நண்பகல் கழிந்த பின்றையே நிகழும் என்ப தும், குளிர் நாடுகளில், அவற்றின் நிகழ்ச்சி மிக அரிது என்பதும் கூறப்பட்டன. - - .

1752-ஆம் ஆண்டில் (Franklin) பிராங்க்லின் என்பவர், புயல் வீசும் காலத்தில் ஒரு காற்றாடியில் இருப்பாணி ஒன்றைக் கட்டி வானத்தே பறக்கவிட, அதன் கண் ஒளி யுடைப் பொறிகள் பல இருக்கக் கண்டு அவற்றை: யாராய்ந்து அவை மின்சாரப் பொறிகள் எனத்துணிந்த னர். மின்னனுக்குரிய ஒளியும் வலியும், மின்சார காரிய மென்ற உண்மையைப், பிராங்க்லின் துணிந்த ஓராண்டிற். குப் பின்னர், இதனைப்பல புலவர் பெருமக்கள் ஆராயத் தொடங்கினர். அட்ரியாடிக் கடற்கரைக்கண் நிற்கும். டுயினோ என்னும் பேரகத்திருந்து (Duino Castle), பலர்