பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 25

3. இனி, பக்கம் 37-ல் முடிவுநிலைப் பகுதிக்கண் முண்ணப்படுமெனவே, அத்துணை யாக்கமின்றி ஒழிந்த மருதமும், நெய்தலும் முடியா நிலமாய் அத்துணை முன்னப்படாதாயிற்றுப் பாலைக் கென்பதாம்' என்ற வாக்கியம் ஒன்று உள்ளது. அதில், "மருதமும், நெய் த லும்............முன்னப்படாதாயிற்று என்ற தொடருள் ஒருமை, பன்மை மயக்கம் உண்மையின், அத்தொடரை "மருதமும் நெய்தலும்................. முன்னப்படாவாயிற்று”

எனத் திருத்திக் கொள்க.

4. இனி, "திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே

நிலனொருங்கு மயங்கு த லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே,” o,

-தொல் பொருள்.12

என்ற சூத்திரத்தின் கீழ், நெய்தற்கண் மருதம் மயங்கிய தற்கு உதாரணமாக,

'கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே (யொள்ளிழை யுயர் மணல் வீழ்ந் தென வெள்ளாங் குருகை வினவு வோனே.” - ஐங் 122 'கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே உறாஅ வறு முலை மடா அ வுண்ணாப் பாவை யூட்டு வோளே! -ஐங்குறு 128

என்று இரண்டு செய்யுள்களையும் மேற்கோளாகக் காட்டி, இவை பெதும்பைப் பருவத்தாள் ஒரு தலைவி 'யொடு வேட்கை நிகழ்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப்புணர்ந்தது, என அதன் துறையைப் பதிப்பித்து, பிழை திருத்தத்தில்,"தலைவி கூறி," என்ப தைத் "தோழி கூறித்,' எனத் திருத்தி உள்ளார்கள்,