பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.32 . . .” காவிரி

பாயிரம், இப்பொழுது கூறப்படும் கடவுள் வாழ்த்து முதலியன பாயிரம் அன்று என என்பதும் 'ஆயிரத்து முன்னுாற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்த தற்பின்” என்று கூறியதினால் பாயிரம் என ஒன்று இருந்தது என்பதும், ஆயிரத்து முன்னூற்று முப்பதில் கடவுள் வாழ்த்து முதலியனவும் அடங்கி விட்டமையின், 'குறளோடு பாயிரமும்’ என ஒடு கொடுத்துக் கூறினமையின், பாயிரம் என்பது குறளின் வேறு என்பதும், அது இப்பொழுது மறைந்துவிட்டது என்பதும் பெறப்பட்டது. இனி இச்செய்யுளைப் பாடி னார் அழகர் காலத்திற்குப் பிற்பட்டவர் எனக் கொள்ளின், அழகர் கூறிய உரைப்பாயிரத்தையே அவர், பாயிரம் எனக் கொண்டார் எனக்கொள்ளினும் இழுக்கில்லை யென்க.

பாயிரம் இல்லா நூலுக்கும், உரையெழுதுவார் பாயிரம் எழுதி உரையெழுதுதல் வேண்டு மாதலின், அழகர் உரைப்பாயிரம் வரைவாராயினர். சிறப்பு வகை பால், கடவுளெனக் கருதப்படும் முனிவரும், பிறரும் பார்ப்பாரும், ஆனிரையும், மழையும், வேந்த ரும் உலகும் என்ற இவரை வாழ்த்துதலும் கடவுள் வாழ்த் தாமாதலின், நீத்தார் பெருமையும், வான் சிறப்பும், அறன் வலியுறுத்தலும் கடவுள் வாழத்தாயிற்று என்க.

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து என்பதற்கு மணக்குடவர், கட வுளை வாழ்த்துதல்' என்று சாதாரணமாகப் பொருள் கூறினார். அழகியார், “சத்துவ முதலிய மூன்று குணங் களுக்கும் அதிகாரிகள் மால் முதலிய மூவராதலானும் அம்மூன்று குணங்கள் ஏதுவாக அறிமுதற் பொருள்கள்