பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலலர். கா. கோவிந்தன் 33.

உளவாமாதலானும், அம்மூன்று பொருளுக்கும், அம் மூவரும் உரிமையுடையராதலானும், அம்மூன்று பொரு ளையும் கூறுவார், அம்மூவரையும் வணங்குதல் முறையா கவின், இ.து ஏற்புடைக் கடவுளை வாழ்த்துதல்' என்று விளக்க உரை வகுத்தார்.

இனி, முதற்கடவுளது உண்மை கூறும் அகரமுதல்' என்று தொடங்கும் குறளை முதலிலும், நூலறிவான் கடவுளுண்மை கண்டான் அவனைத் தொழுதல் வேண்டு மாதலின் அதனைக் கூறும் "கற்றதனா லாயபயன்’ என்னும் குறளை அதன் பின்னும், அவ்வாறு தொழுதான்். வீடடைவான் ஆதலின், அதனைக் கூறும் "மலர்மிசை யேகினான்’ என்னும் குறளை அதன் பின்னும், அவ்வாறு வீடடைதலாவது, "அவலக் கவலைக் கையாற்றி னிங்கிப் புண்ணிய பாவமென்னும் இரண்டினையும் சாராமல், சாதலும் பிறத்தலுமில்லாதொரு தன்மையெய்து தலாகலான், மனத்துக்கண் மாசிலனாதல் அறம் என்ப தற்கேற்ப, முதற்கண் மனக்கவலையறின் வருத்தம் ஒன்றும் இல்லை யாதலின், அது கெடுதலைக் கூறும், “தனக்குவமை யில்லாதான்்" என்னும் குறளை அதன் பின்னும், மனக் கவலையறின், அறத்தின் பிறவாய, காமமும், பொருளும் பற்றிவரும் அவலம் கெடுமாதலின், அது கெடுதலைக் கூறும் "அறவாழி அந்தணன்" என்னும் குறளை அதன்பின்னும், புண்ணியத்திடத்து விருப்பும், பாவத்திடத்து வெறுப்பும் நீங்கினாலன்றி, அவற்றை விடமுடியாதாகலான், அது செய்தலைக்கூறும், "வேண்டு தல், வேண்டாமை யென்னும் குறளை அதன் பின்னும், அப்புண்ணிய பாவங்கள் காரணமாக வரும் நல்வினை, தீவினைகளுள் நல்வினையும் பிறத்தற் கேதுவாமாகலின், அவ்விரண்டினையும் நீக்க வேண்டுமாகலின், அவை கெடு தலைக் கூறும் 'இருள்சேர் இருவினையும்' என்னும்.