பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~34 - காவிரி

குறளை அதன்பின்னும், இம்முறை. இவையனைத்தினை யும் கெடுத்தான்், புலனடக்கி வீடுபெறுவான் ஆதலின் அதனைக் கூறும் பொறிவாயில் ஐந்தவித்தான்்' என்னும் குறளை அதன் பின்னும், மேற்கூறியதனையே வற்புறுத்து முகத்தால் அவ்வாறு செய்தார் வீடடைவர் என்றும், செய்யாதார், பிறந்து பிறந்து உழல்வர் என்றும் கூறும் பிறவிப் பெருங்கடல்" என்னும் குறளை அதன் பின்னும், இத்தகைய பேற்றினைத் தரும் இறைவனால் கொடுத்த இவ்வுடலால் அவனுக்குத் தொண்டு செய்தல் வேண்டுமாதலின், அதனைக் கூறும் "கோளில் பொறி" என்னும் குறளை அதன் பின்னும் வைத்து மணக்குடவர் உரை கூறியுள்ள முறையும், முதல் இரண்டு குறள்களை யும் இக்காரணம்பற்றி இம்முறையே வைத்து, இறைவனை மனத்தால் நினைத்தும், வாக்கால் அவன் புகழைக் கூறி யும், மெய்யால் அவன் கூறிய நெறி வழிநின்றும், வழிடுவார் வீடடைவர் ஆதலின் அவைகளை முறையே கூ று ம், "மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமை, "இருள் சேர் இருவினை," "பொறிவாயில் ஐந்து" என்னும் குறள்களை முறையே ஒன்றன்பின் ஒன்று வைத்தும், அவ்வாறு செய்யார் படும் இன்னல்களை முறையே கூறும், "தனக்குவமையில்லாதான்், "அற வாழி யந்தணன்," "கோளில் பொறி” என்னும் குறள் களை, அவைகளின் பின் முறையே வைத்தும், அவ்விரு வரடையும் பயன்களையும் வற்புறுத்து முகத்தால் ஒருங்கே தொகுத்துக் கூறும் "பிறவிப் பெருங்கடல்" என் லும் குறளை இறுதியாகவும் வைத்துப் பரிமேலழகர் உரை கூறியுள்ள முறையும், மிகவும் போற்றத் தக்கதே கயாம். х - -

1. அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு