பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 Errestif)

பாட்டாற் கூறியது கொண்டு 'அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தில் அவர்நினைந்த வடிவொடு விரைந்து சேரலின், ஏகினான் என இறந்த காலத்தாற் கூறினார்’ என்று உரைவகுத்த திட்பம், அறிஞர் அனைவரானும் போற்றற்குரியதேயாம்.

4. வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்

யாண்டும் இடும்பை யிலர்'

என்பது மணக்குடவர் கொண்ட பாடம்.

" வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு

யாண்டு மிடும்பை யில’

என்பது பரிமேலழகர் கொண்ட் பாடம். இப்பாட பேதத் தால் பொருட் சிதைவு ஒன்றுமில்லை யெனினும், "சேர்ந் தார்...... நீடுவாழ்வார்” (குறள், 3). நெறிநின்றார் நீடு' en morf currff” (குறள், 6) "அடிசேர்ந்தார் நீந்துவர் அடிசேராதார் நீந்தார்’ (10) 'வணங்காத்தலை குணமிலவே' (9) என்று அல்வழித் தொடராகவே, நான்கு குறள்களைக் கூறியுள்ளாராதலானும், தாள்சேர்ந்தார்க் கல்லால்...... மாற்றலரிது" (குறள் 7) "தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தலரிது’ (8) என, நான்காம் வேற்றுமை உருபு விரியக்கூறும் இரண்டிடங்களிலும், "சேர்ந்தார்க் கல்லால்' 'சேர்ந்தார்க் கல்லால்' என வற்புறுத்துதற் பொருட்டு “அல்லால்' என்றதையுடன் சேர்த்துக் கூறியவர், ஈண்டு அவ்வாறு கூறாமையானும், மணக்குடவர் கொண்டபாடமே கொள்ளத்தக்க பா.ம் என்று கருதுகின்றேன்; ஆன்றோர்கள் ஆராய்ந்து உண்மை துணிவார்களாக.

இனி, வேண்டுதல் வேண்டாமை' என்பதற்கு - .இ ன்பமும், வெகுளியும் இல்லாதான்்" என்று பொருள்

  • ... "