பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இளங்கோவும், இறைமகனும்"

"சேரன் செங்குட்டுவன்’ நூலாசிரியர், உயர்திரு. மு. இராகவையங்காரவர்கள், தமது நூலின் 5-ஆம் அதி காரமாகிய, செங்குட்டுவனது வடநாட்டியாத்திரையின், இரண்டாம் அங்கமாகிய, காட்சிக்காதையின், முதற்பத்தி யின், இரண்டாவது அடிக்குறிப்பில்," "இளங்கோ வேண் மாளுடனிருந்தருளி எனவரும் மூலத்துக்கு அரும்பத உரை யாசிரியர்,"இளங்கோ வேண்மாள் என்பது பெயர்; நன்னன் வேண்மாள், உதியன் வேண்மாள் என்பதுபோல; வேண் மாளுடனிருந்து இளங்கோவை அருளிப் பாடிட்டு என்று மாம் என்றெழுதினார். இதனால், தம்பி இளங்கோவடி களுடனும், மனைவி வேண்மாளுடனும் செங்குட்டுவன் இருந்தான்் என்று அத்தொடருக்கு உரை கூறுவதும், அவ் வுரையாசிரியர் கருத்தாதல் விளங்கும். இளங்கோவடிகள் தம் தமையனுடன் தங்கியிருந்தவரென்பது, பதிகத்தா ஆலும் தெரியவருதலாற் பிற்கூறியதும் பொருந்துவதே யாம்' என்று எழுதியுள்ளார்கள்.

இவர்தம் கூற்றினால், 'இளங்கோவேண்மாள் உடனி ருந்தருளி' என்ற அடிக்கு, இளங்கோவும், வேண்மாளும், இறைமகனும் ஒருங்கிருந்தனர் என்பது பொருளாகும் என்பதும், அடிகள், குறவர், குன்றத்து நிகழ்ந்தன குட்டு வதற்குக் கூறுழி, தாமும் அவனுடன் இருந்ததாகக் காட்சிக் காதையினும், பதிகத்தினும் கூறியுள்ளார்