பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காவிரி

நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து, சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி, வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய் காரியங்களை, அவன் னம் விரும்பும் வகை, சொல்லும் வன்மையும், அரசர் கருதியதனை அவர் கூறாமுன்பே, குறிப்பானறிதலும் ஆய இன்னோ ரன்ன குணங்களையுடைய அமைச்சனையும்,

அமைச்சனாதற்கேற்ற குடியின்கண் பிறந்தவனும் வேந்தன் விரும்பும் பண்புடையவனும், இயற்கையறிவும் கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும், பலகாலும், பலரோடும், ஆராயப்பட்ட கல்வியும் உடையவனும், தான்் சென்ற கருமத்தைப் பகைவேந்தர் மனங்கொளச் சொல்லி அவர் செயிர்த்து நோக்கின், அந்நோக்கிற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை பயப்பிப்பவனும் ஆய துாதனையும்,

தள்ளா விளையுள். திருவினர், தக்கோர் சாலச் செறிந்ததும், பெரும் பொருளுடைமையாற் பிறரால் விரும்பத் தக்கதும், பிறநாட்டினர் எல்லாம் ஒருங்கே தன் கண் வருங்கால் தாங்கி, வேந்தர்க்கு இறை உய்க்கும் நலத்தனும், பல்குழு, வேந்தலைக்கும் படர் கொலைக் குறும்பு, தீய பல்கும் உட்பகை, உடற்றும் பகை, உறுபசி, தீராநோய், ஆகிய இவை புல்குறிதான்ும் இல்லாததும், பொங்கிய செல்வம், ஏமம், பிணியின்மை, இன்பம், விளைவு முதலியவற்றை அணியாக வுடையதும், வருபுனல் வாய்ந்த வோங்கல், வல்லரண், மேல்நீர், கீழ்நீர் என்னும் பல்லுறுப்பினையுடையதும் ஆய நாட்டினையும்,

நீர் அரண், நில அரண், மலை அரண் காட்டரன் என்ற நால்வகை அரண்களையும், ஏணிக்கெட்டா உயர் -வும், புறத்தோரால் அகழலாகா அடி அகலமும், அகத் தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலும், கல்