பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

இருந்த மூதாதையர் சிலர், அழிந்தன போக, அழியா திருந்த அப்பழம் பாக்களை எல்லாம், அரிதின் முயன்று தேடிக் கொண்டார்கள்.

- அவ்வாறு தேடிப்பெற்ற அப்பாக்களை ஊன்றிப் அடித்த புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்றுகூடி இருந்தும், அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களைப் பத்துப்பாட்டு: எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு என்ற தலைப்புக் களில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.

இவற்றையெல்லாம் உணராத பள்ளிப் பருவம், செய்யாறு உயர்நிலைப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த போது எங்கள் பள்ளிக்குத் தமிழாசிரியராய் வந்து சேர்ந் தார் சைவசித்தாந்த கலாநிதி ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள். ஒரு நாள், வகுப்பறையில் தமிழ்ப் பாட நூலில் இடம் பெற்றிருந்த அரச்சந்தி புராணப் பாடல் ஒன்றில் வரும் "அவமே புறம் அளவுத்தனம்' என்ற தொடருக்குச் சொல்லிலக்கணம் கூறுமாறு மாணவர்களாகிய எங்களைக் கேட்டார். இலக்கண வகுப்பு என்றால், கொடுத்திருக்கும் பாட நூலில் ஒரு பகுதியை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது தவிர்த்து வேறு முறையாக எங்களுக்குச் சொல்லாவது, இலக்கண மாவது என்பது ஒன்றும் புரியவில்லை. இறுதியாக ஆசிரியர் ஒளவை அவர்கள், "இதற்கு இலக்கணம் இடவழுவமைதி தனித்தன்மைப் பன்மை” என்பதுதான்் என்றார்கள். எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது. அதுவரை, வகுப்பில் தமிழ்ப் பாடம் எடுத்த எந்தத் தமிழாசிரியரும் எந்நிலையிலும் கூறாத சொற் றொடர் அது. "இடமாவது வழுவாது, அமைதியாவது தனித்தன்மைப் பன்மையாவது” என்பன குறித்து ஏதும் புரியாமல் விழித்தோம். .